என் மலர்
கிருஷ்ணகிரி
- இட்லியில் ரசாயனம் கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர்.
- இட்லியை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் -ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ் 10-ல், வேடிப்பன் என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.
இங்கு விற்பனை செய்யப்படும், இட்லியை நேற்று முன்தினம் சிலர் வாங்கி சென்றனர்.
அந்த இட்லி, பேக்கரியில் விற்கப்படும் பன், பிரட் போல் இருந்ததுடன், இட்லி சுவையாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள், இதுபோன்ற இட்லியை விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்தனர்.
ஆனால், நேற்று காலையிலும், அதே சுவையுள்ள இட்லியை ஓட்டலில் விற்பனை செய்தனர். இதனால் அந்த ஹோட்டலை முற்றுகையிட்ட இளைஞர்கள் மூன்று நாட்கள் ஆனாலும் கெடாத இந்த இட்லியில் ரசாயனம் கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர்.
அதற்கு ஓட்டல் நிர்வாகம் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஆமணக்கு விதை சேர்ப்பதால் இதுபோன்று இட்லி இருக்கிறது என்றது. மேலும் சானசந்திரத்தை சேர்ந்த ஒருவர்தான் ஒரு இட்லி 3 ரூபாய் என்ற விலையில் தங்களுக்கு விற்பதாகவும், ஓசூரின் பல ஹோட்டல்களில் இதுபோன்ற இட்லி தான் விற்பதாகவும் தெரிவித்தது.
அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம், இட்லியை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதே நேரம் ஹோட்ட ல்களுக்கு இட்லி சப்ளை செய்யும் நபர் இட்லியை ஆய்வு செய்து கொள்ளுங்கள். என் குழந்தைக்கு கூட இதே இட்லியை தான் கொடுக்கி றேன் என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜானா திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவு திட்டம், நமக்கு நாமே திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் சமூக பொருளாதா மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், இருளர் மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்தல், தேசிய கிராம சுயாட்சி திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் போன்ற பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும், புதிய திட்ட பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
- குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 238 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விதிமுறைகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும் செல்வது வாடிக்கையாக உள்ளது.
- பாதுகாப்பாக சாலையில் பயணிப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் பகுதிகளில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும் செல்வது வாடிக்கையாக உள்ளது.
இதனை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று, ஓசூர் போக்குவரத்து போலீசார் சாலைகளில் ஹெல்மெட் போடாமல் சென்ற 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்தனர்.
பின்னர் அவர்களை ஓரிடத்தில் நிற்க வைத்து ஹெல்மெட் போடாமல் சாலைகளில் செல்ல மாட்டோம், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்போம், 3 பேர் இருசக்கர வாகனத்தில் செல்ல மாட்டோம், அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கி செல்ல மாட்டோம், போலீசார் வாகன சோதனை செய்யும் போது ஒத்துழைப்பை கொடுப்போம், பிறருக்கு இடையூறு செய்யாமல் பாதுகாப்பாக சாலையில் பயணிப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
ஹெல்மெட் போடாமல் போலீசாரிடம் சிக்கிய இளைஞர்களிடம் ஹெல்மெட் வாங்கி வந்து அணிந்த பின்னரே விடுவிப்போம் என்று போலீசார் கண்டிப்புடன் கூறியதால் அனைவரும் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஹெல்மெட் வாங்கி வந்து போலீசாரிடம் காண்பித்து அணிந்து அதன் பின்னர் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
- அலசநத்தம் ஏரி தூர் வாரப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
- மேயர் எஸ்.ஏ. சத்யா ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.23.5 லட்சம் மதிப்பில், ஓசூர் அலசநத்தம் ஏரி தூர் வாரப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, உதவி கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார்.ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் ஆஞ்சி, பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் தமிழ்வாணன், மனிதவள மேம்பாட்டு துறை முதுநிலை மேலாளர் பாபு மற்றும் மக்கள் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணாராவ், ராகவன், ஆடிட்டர் மணி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர்.
- குட்கா, ஹான்ஸ் ஆகியவை மூட்டைகளாக உள்ளே பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து சரக்கு வேன் ஒன்று, கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த வேனை போலீசார் நிறுத்தி அதில் என்ன உள்ளது என கேட்டனர். அப்போது வேனில் இருந்தவர்கள் தேங்காய் நார் மூட்டைகளை கொண்டு வருகிறோம் என கூறினார்கள்.
ஆனாலும் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் வேனுக்குள், தேங்காய் நார் மூட்டைகளுக்கு இடையே குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் ஆகியவை மூட்டைகளாக உள்ளே பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்த போலீசார் அதை வைத்திருந்ததாக தென்காசி மாவட்டம்வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர். வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர். (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ஏசுராஜ், சரக்கு வேனின் டிரைவர் மற்றும் உரிமையாளர் ஆவார். செல்வம் கிளீனராக இருந்து வந்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு அவர்கள் குட்காவை கடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- ரஞ்சனியின் கணவர் சென்னப்பா தட்டி கேட்டுள்ளார்.
- ஆத்திரம் அடைந்த முனிராஜ் சென்னபாவை கத்தியால் குத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள பேகைபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி. இவரது உறவினர் முனிராஜ் (எ) விஜய் (வயது 25).
ரஞ்சனிக்கும் முனிராஜின் மனைவிக்கும் வாய் தகறாரு ஏற்பட்டுள்ளது. இதை ரஞ்சனியின் கணவர் சென்னப்பா தட்டி கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ் சென்னபாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சென்னப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கே. பி. முனுசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர பொருளாளர் சரவண வேல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க நிர்வாகி அன்பழகன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வின் இணை பொதுச் செயலாளரும், வேப்பனபள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது,மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேங்கன்,வேடி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், அவைத்தலைவர் கிருஷ்ணன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், நகர செயலாளர் விமல் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- காப்பர் கம்பிகள், உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளது.
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மதரசனபள்ளி மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து இருபது ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகள், உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளது.
இதே போல தேன்கனி கோட்டை அருகேயுள்ள மருதனப்பள்ளி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளன.
இந்த சம்பவங்கள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி, தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
- 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
- யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்பகுதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டினர்.
இந்த யானைகள் கூட்டத்தில் பிரிந்த 30 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முள் பிளாட் என்ற இடத்தில் தஞ்சமடைந்தன. இந்த யானைகளை நேற்று முன்தினம் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் யானைகள் அங்கிருந்து ஆலள்ளி வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டன. கர்நாடகாவுக்கு விரட்டப்பட்டன இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனவர்கள் காளியப்பன், வேணு மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 25-க்கும் மேற்பட்டோர் யானைகளை ஆலள்ளி பகுதியில் இருந்து பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் மரக்கட்டா வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- இருசக்கர வாகனத்தில் பேரிகை- சூளகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆஞ்சப்பா பலியானார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிஅருகே வெங்கடேசபுரம் அருகே உள்ள குட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா. இவரது மகன் ஆஞ்சப்பா (வயது 25). கூலி தொழிலாளி.
இவருக்கும் சூளகிரி அருகே தியாகரசனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால் மகள் வெண்ணிலாவுக்கும் 1 மாதம் முன்பு திருமணமானது.
நேற்று இரவு குட்டலப்பள்ளியில் இருந்து ஆஞ்சப்பா வும், அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் பேரிகை- சூளகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
ஏ.செட்டி பள்ளி பகுதி வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆஞ்சப்பா பலியானார். மனைவி கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதை அறிந்த பேரிகை போலீசார் படுகாயம் அடைந்த வெண்ணிலாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு ஆஞ்சப்பா உடலை ஒசூர் அரசு மருத்துமனைக் கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீஸ் ஏட்டு செந்தில்குமார் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வெள்ளைச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). முன்னாள் போலீஸ் ஏட்டு. இவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ்குமார், மனை வியின் கள்ளக்காதலன் கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையை சேர்ந்த ராஜபாண்டியன், விஜயகுமார் மற்றும் பாவக்கல்லைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன் (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் மகன் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மற்ற 5 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி வெள்ளைச்சாமி செயல்பட்டுள்ளார்.
அவர் தான் கூலிப்ப டையின் தலைவனாக இருந்து, திட்டம் வகுத்து கொடுத்தது, ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் சித்ராவிடம் வாங்கி கூலிப்படைக்கு ஆட்களை அனுப்பி கொலை செய்தது, பிணத்தை கிணற்றில் போட்டது போன்ற வேலைகளை செய்திருந்தார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ஒரு கார், ரூ.17 ஆயிரத்து 500, 2 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் ஏட்டு செந்தில்குமார் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறா ர்கள்.
போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி வெள்ளைச்சாமியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கூலிப்படை தலைவன் ஊத்தங்கரை அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, ரவுடி ஆவார்.
ஊத்தங்கரை ஜோதி நகர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த சிவக்குமார் கொலை செய்யப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம், நாட்ரம்பள்ளி அருகே உடல் வீசப்பட்டது.
அந்த வழக்கில் வெள்ளைச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வந்த வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவின் கணவரான செந்தில்குமாரை கொலை செய்துள்ளார்.
இதற்காக ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பெற்று, கூலி ப்படையினர் உதவியுடன் உடலை கிணற்றில் போட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






