என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .
    • கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி குதிரைபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பு வடிவு என்பவர் தனது 3 வயது குழந்தையான ரியாஸ்டி (எ)அக்சயா ஸ்ரீ உடன் மத்திகிரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏ.டி.எம்.முக்கு சென்று தன் மகளை வெளியே நிறுத்திவிட்டு பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .

    இதுகுறித்து அன்பு வடிவு மத்திகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன்மூலம் குகாணாமல் போன குழந்தையை 2 மணிநேரத்தில் குதிரைபாளையம் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மத்தூர் ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் சரகத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஜி.டி.குப்பம் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே ஆற்றங்கரை பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பேர் பிடிபட்டனர்.

    முருகன் (வயது 31), சக்திவேல் (36), குமரேசன் (24), மணிகண்டன் (30), சந்தோஷ்குமார் (23), முருகன் (42) ஆகிய அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களை மத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.
    • மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.

    மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் முன்னிலையில், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள்.

    நேர்காணலை தொடர்ந்து புதிய மகளிரணி நிர்வாகிகள் கட்சி தலைமை அறிவிக்க உள்ளது. மதியழகன் எம்.எல்.ஏ. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதால் கலந்து கொள்ளவில்லை.

    • மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது,
    • தூக்குப்போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சின்னகாவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 47).

    இவருக்கு சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தூக்குப்போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவர் மகன் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல கிருஷ்ணகிரி தாலுகா லைன் கொல்லை பகுதியை சேர்ந்த அஸ்லாம் மனைவி சஹீனா (வயது 40). இவருக்கு தீராத வயிற்றுவலி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மகன் முஹம்மத் கொடுத்த புகாரின் பேரில் கிரு ஷ்ணகிரி தாலு க்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராமத்திற்குள் அந்த யானை புகுந்து கரும்புகளை தின்று சேதப்படுத்தியது.
    • இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுங்கி அட்டகாசம் செய்தது

    சூளகிரி,

    ஓசூர் அருகே சானமாவு காட்டில் காட்டு யானை ஒன்று பதுங்கி இருந்து அந்த பகுதிகளில் சுற்றித்திரிகின்றது.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் சூளகிரி ஒன்றியம் பீர்ஜேபள்ளி அருகேயுள்ள நாயக்கனபள்ளி கிராமத்திற்குள் அந்த யானை புகுந்து கரும்புகளை தின்று சேதப்படுத்தியது.

    மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுங்கி அட்டகாசம் செய்தது. பின்னர் அந்த யானை போடூர் காட்டுக்குள் சென்று விட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சேதமடைந்த இருசக்கர வாகனங்களை பார்வையிட்டனர்.

    நாயக்கனபள்ளி கிராமத்திற்குள் யானை புகுந்ததால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போடூர் காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ள யானையை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டவேண்டும்.

    யானையால் சேதமடைந்த இருசக்கர வாகனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
    • விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மாவட்ட அளவிலான எருது விடும் விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த சம்பந்தப்பட்ட விழா குழுவினர்கள், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இடம் மற்றும் நாள் குறிப்பிட்டு உரிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அரசிதழில் பதிவு செய்யப்பட்டதற்கான கிராமங்களின் விவரங்கள் அடங்கிய அரசாணை நகல் இணைக்க வேண்டும்.

    விழாவின் போது நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தாங்களே பொறுப்பு என ரூ.50-க்கான உறுதிமொழி பத்திரத்தில் விழா குழுவினர் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்டுள்ளதான ஆவணம் சமர்பிக்க வேண்டும். விழாவில், அனுமதிக்கப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை தொடர்பான உத்தேசபட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான அரசாணை நகல் இணைக்க வேண்டும்.

    எருது விழா அரங்கத்தின் மாதிரி வரைப்படம் இணைக்க வேண்டும். விழா அரங்கத்தின் நீளம் 200 மீட்டர் இருக்க வேண்டும். எருதுகள் ஓடும் தளம் 125 மீட்டர் இருக்க வேண்டும். காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கான உடற்தகுதி சான்று பெற வேண்டும்.

    அவ்வாறு சான்று பெற்ற காளைகள் மட்டுமே எருது விடும் விழாவில் அனுமதி வழங்கப்படும். எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று இணைக்க வேண்டும்.

    தமிழக அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ற சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். காளைகள் ஓடும் பகுதியில் 8 அடி உயர இரட்டை தடுப்பு அரண்கள் அமைக்க வேண்டும். காளைகளை துன்புறுத்த கூடாது.

    எனவே, எருது விடும் விழா நிகழ்ச்சியில் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர்கள் சரண்யா, சதீஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் தாசில்தார்கள், எருது விடும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் மக்கள் விரைவான 5 ஜி சேவையை பெற முடியும்.

    தற்போது 4 ஜி சேவை நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் 5 ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    5 ஜி நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி காணும் எனவும் கணக்கிடப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 5 ஜி சேவைகள் தொடங்க ப்பட்டன.

    தமிழகத்தை பொறுத்த மட்டில் சென்னையில் ஜியோ, ஏர்டெல் சார்பில் 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் மேலும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 5 ஜி சேவையை செயல்படுத்த ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.40,446 கோடி முதலீடு திட்டம் உள்ள நிலையில் 6 நகரங்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    • இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர் ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 22). இவரது மனைவி கீர்த்தி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவி இடையே குடும்ப தகறாரு எபட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சத்தியமூர்த்தி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வேதவல்லி (வயது 22).

    கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி வி.ஐ.பி. நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 21).

    நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அபிநயா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது தந்தை ஞானசேகரன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர்.
    • கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய முத்தூர், நாகராஜ புரம் கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுதோறும் பொங்கலுக்கு முன்பாக வரும் செவ்வாய் கிழமை தினத்தில் மாரியம்மன், ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர்.

    நாகராஜ புரம் கிராமத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு மா விளக்கு ஊர்வலம் தொடங்கியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மண்டு பகுதிக்கு சென்று சாமி அழைப்பு நடத்தி வழிபாடு நடத்தினர்.

    பின்னர் பூஜை செய்த இரண்டு பூசாரிகளுக்கு சாமி வரவழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சாமி வந்த பூசாரிகள் கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர்.

    சாமி கரகத்துடன் எல்லையில் இருந்து கொண்டு ஊரைக் காக்கும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஊர் மணியகாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
    • மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அதிர்ச்சியில் அன்னையப்பா இறந்தது தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் அன்னையப்பா. இவரது மகன் சென்னப்பா என்கிற சேகர் (வயது 37). வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அன்னையப்பாவும், கிருஷ்ணப்பாவும் அண்ணன் -தம்பி ஆவார்கள்.

    சென்னப்பாவும், முனிராஜூம் பெரியப்பா-சித்தப்பா மகன் வழி முறையில் அண்ணன்-தம்பி ஆவர். இவர்கள் அருகருகில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவிற்கும், சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் சென்னப்பா தனது தம்பி மனைவி மதுவை கண்டித்தார். இது குறித்து மது தனது கணவர் முனிராஜூக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், பக்கத்து வீட்டில் வசிக்கும் பசவராஜ் என்பவரின் மகன் ரேணுகா ஆரத்யா (20), பேகேப்பள்ளி சக்தி (22) ஆகியோர் அங்கு வந்து சென்னப்பாவுடன் தகராறு செய்தனர். அவர்களுக்குள் தகராறு முற்றியதில் சென்னப்பாவை அவர்கள் கத்தியால் குத்தினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சென்னப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வேன் டிரைவர் கொலை தொடர்பாக முனிராஜ், ரேணுகா ஆரத்யா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சக்தியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதனிடையே கொலை செய்யப்பட்ட சென்னப்பாவின் உடல் ஓசூர் தனியார் மருத்துவமனையில் இருந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், சென்னப்பாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது. இதையடுத்து பேகேப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு சென்னப்பாவின் உடல் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் படுத்திருந்த சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவை உறவினர்கள் எழுப்ப முயன்றனர்.

    அப்போது மகன் இறந்த தகவல் அறிந்ததும் அவர் இறந்து விட்டார். மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அதிர்ச்சியில் அன்னையப்பா இறந்தது தெரியவந்தது. இதை கண்டு உறவினர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தந்தை-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இதைத் தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

    • 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது. 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது.
    • பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது.

    இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள், பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆடு, மாடுகளுடன் உத்தனப்பள்ளியில் திரண்டனர்.

    அவர்கள் திடீரென கால்நடைகளுடன் ராயக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

    ×