என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள், ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.

    காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூர், ஆந்திரா, போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள், ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    பண்டிகை காலங்கள் இல்லாத இதர நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10 முதல் 12000 வரையிலும், பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 7000 வரையிலும், விற்பனை ஆகும், தற்போது பண்டிகை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது. கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது. இதனால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதிக விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும், வியாபாரிகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் குவிந்துள்ளனர்.இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சராசரியாக ரூபாய் 8 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது,
    • கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது, வாரத்தில் வெள்ளிக்கிழமை கூடும் இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும், அண்டை மாநிலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், இங்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    கேரள வியாபாரிகள் வருகையால் உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் அதிகளவு மாடுகளை விற்பனை செய்தனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இன்று விற்பனையாகியது.

    சந்தையில் பசு மாடுகளின் விலை சுமார் 30,000 முதல் 60,000 வரை விற்பனையான நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் விவசாயிகள் வருகையால் சந்தை களைகட்டியது. வெளிமாநில விற்பனையாளர்கள் என சந்தையில் வியாபாரம் மொத்தம் சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனையானதால் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேபோல பொங்கல் பண்டிகை என்பதால் மாடுகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக புதியதாக மாட்டுக் கயிறுகள், குஞ்சம், மணிக்கயிறுகள் உள்ளிட்டவை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர் .

    • திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.
    • திருமணம் செய்து கொள்ள காளிராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகேயுள்ள புளியானூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அவருடன் வேலை பார்த்து வந்த இவரது உறவினர் நாகணம்பட்டி பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் காளிராஜ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.

    இருவரும் பல்வேறு இடங்களில் காதல் ஜோடியாக சுற்றி திரிந்தனர். இந்நிலையில் காளிராஜ் பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

    தற்போது அந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள காளிராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு காளிராஜின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஊத்தங்கரை மகளிர் போலீசில் அந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரின்பேரில் காளிராஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • பின்னர் செல்போன் மூலம் இருவரும் பழக ஆரம்பித்தனர்.
    • கார்த்திக் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள தேவர்குட்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கார்த்திக் (வயது 26).

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் கார்த்திக் திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்ரிமோனியல் ஒன்றில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட்டு பெண் தேவை என விண்ணப்பித்தார்.

    இதேபோல மாப்பிள்ளை கேட்டு கர்த்திகாதேவி என்பவரும் விண்ணப்பித்து இருந்தார்.இதையடுத்து இருவரும் தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

    பின்னர் செல்போன் மூலம் இருவரும் பழக ஆரம்பித்தனர். கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக கர்த்திகாதேவி தெரிவித்துள்ளார்.

    இதை நம்பி கார்த்திக்கும் அவரை நினைத்து உருகியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட கர்த்திகாதேவி நகை வாங்க வேண்டும், புதிய செல்போன் வாங்க வேண்டும் என்று அவ்வப்போது ஏதேனும் காரணம் கூறி கார்த்திக்கிடம் இருந்து வெவ்வேறு வங்கி கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.5,40,000 பணத்தை பெற்றுள்ளார்.

    இதன்பிறகு கார்த்திக்குடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்டுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
    • இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்களை த ெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.

    இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

    ஆனால் தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு, நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சு புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    மேலும், உயர்நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, புகை நமக்கு பகை என்பதை உணர்ந்து போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர்,

    பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம். போகிப்பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும்.

    அன்று குப்பையை முறைப்படி ஒழித்து பொங்கல் திருநாளை மிகழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். 

    • ஆர்ய வைசிய சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
    • நாள்தோறும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரியில், 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது.இந்த கோவிலை ஆர்ய வைசிய சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில்,மார்கழி வாசவி மகா உற்சவம் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி, முக்கோட்டி ஏகாதசி மற்றும் புத்தாண்டு ஆகியவை இந்த ஒருமாத கொண்டாட்ட

    ங்களின் முக்கிய நாட்களாகும்.

    கோவிலின் ஒரு பகுதியில் இருக்கும் ஸ்ரீஆஞ்சநேய சாமி சன்னிதி, வியாச முனிவரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தை, கோவில் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஹரிஷ்பாபு, செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் பொருளாளர் எஸ். எஸ்.ராஜா மற்றும் நிர்வாகிகள் நிர்வகித்து வருகின்றனர்.

    தற்போது நடைபெற்று வரும் மார்கழி வாசவி மகா உற்சவத்தில் நாள்தோறும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. மேலும் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    • படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.1000-ம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    உதவி பெறும் நாளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சவயது வரம்பு எதுவும் இல்லை. பதிவு செய்து ஒரு ஆண்டு முடித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை.

    மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கலாம் கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவிகளாக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவுற்று முறையாக புதுப்பித்திருப்பின் மற்றும் மாற்றுத்திறனாளி எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று காத்திருப்போர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறலாம்.

    அதற்கான விண்ணப்ப படிவத்தை tnvelaivaaippu.gov.in மற்றும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்ப படிவத்தில் பக்க எண் 7-ல் வருவாய்த் துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் முத்தி ரையுடன் கையொப்பம் பெற்று, முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச்சா ன்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, புகைப்படம், ஆதார்கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கலெக்டர் அலுவலக பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அடுத்த மாதம் 28-ந் தேதி நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பின் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில நாட்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • போலீசார் காளிராஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகேயுள்ள புளியானூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அந்த நிறுவனத்தில் இவருடைய உறவினரான நாகனாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் காளிராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இருவரும் பழகி வந்தனர். சில நாட்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர். காளிராஜ் பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள காளிராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காளிராஜின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த பெண் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் காளிராஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சந்தையில் பசு மாடுகளின் விலை சுமார் 30,000 முதல் 60,000 வரை விற்பனையான நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் விவசாயிகள் வருகையால் சந்தை களைகட்டியது.
    • வெளிமாநில விற்பனையாளர்கள் என சந்தையில் வியாபாரம் மொத்தம் சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனையானதால் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது. வாரத்தில் வெள்ளிக்கிழமை கூடும்.

    இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், இங்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம்.

    இந்த வாரம் கேரளாவை சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    கேரள வியாபாரிகள் வருகையால் உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் அதிகளவு மாடுகளை விற்பனை செய்தனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இன்று விற்பனையாகியது.

    சந்தையில் பசு மாடுகளின் விலை சுமார் 30,000 முதல் 60,000 வரை விற்பனையான நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் விவசாயிகள் வருகையால் சந்தை களைகட்டியது. வெளிமாநில விற்பனையாளர்கள் என சந்தையில் வியாபாரம் மொத்தம் சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனையானதால் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேபோல பொங்கல் பண்டிகை என்பதால் மாடுகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக புதியதாக மாட்டுக் கயிறுகள், குஞ்சம், மணிக்கயிறுகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

    • புரோகிதர்கள், முஸ்லீம் மத குருக்கள்,கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
    • பொங்கலோ பொங்கல் என்று கூடியிருந்தவர்கள் முழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.

    துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து புரோகிதர்கள், முஸ்லீம் மத குருக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின ்போது,மண்பானைகளில் புத்தரிசி பொங்கலிட்டு, பொங்கல் பொங்கியதும், பொங்கலோ பொங்கல் என்று கூடியிருந்தவர்கள் முழங்கினர்.

    தொடர்ந்து, சூரியனுக்கு பொங்கல் படைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் சர்க்கரைபொங்கல் வழங்கப்பட்டது. விழாவில், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதா, மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் பொங்கல் பண்டிகை சிறப்புகள் குறித்து பேசினர்.

    • சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    • கண்ணுகானூர் குமார், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் மத்தூர், அத்திகானூர் ,கண்ணன்ட ஹள்ளி, நடுப்பட்டி, கருங்காலிப்பட்டி, சிவம்பட்டி, வாலிப்பட்டி, களர்பதி , பள்ளத்தூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் தமிழக அரசு அறிவித்த இலவச பொங்கல் தொகுப்பினை மத்தூர் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் குணவசந்தரசு தலைமையில் ரூ.1000 , ம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், ஒன்றிய துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி செயலாளர் கமலநாதன், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, தலைமை குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி ஒன்றிய இளைஞரணி பொருப்பாளர் சத்தியமூர்த்தி கண்ணன் டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் மோகன் குமார், வாலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரந்தாமன், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், பொம்மேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, சிவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி சரவணன், கண்ணடஹள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் டைகர் பாலு, வாலிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சபிதா சேட்டு, கண்ணன் டஹள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் பெருமக்கள் முருகன், கட்சி நிர்வாகிகளான ஜெகதீசன், வேளாவள்ளி வீரமணி, கண்ணுகானூர் குமார், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரியில் 30-வது மற்றும் 31-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்த விழாக்களுக்கு அதியமான் கல்வி குழும ஆலோசகரும், முன்னாள் துணைவேந்தருமான முத்துச்செழியன் தலைமை தாங்கினார்.

    எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி வரவேற்று பேசுகையில், இங்கு படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களைப் போன்று தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.

    30 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை க்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசும்போது அப்துல்கலாமின் கனவுகாணுங்கள் எனும் வாசகத்தை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

    மேலும், ஒவ்வொரு முறையும் சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் வெற்றியடையலாம் என்று அறிவுறுத்தினார்.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற 31-வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் துணைவேந்தரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பெண்ணியல் துறை இயக்குநருமான மணிமேகலை, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவ மாணவியர், நாளை செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்துமுடிக்க வேண்டும்,

    ஒவ்வொரு மாணவனும் உயர்கல்வி கற்க வேண்டும். இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கல்வியில் உயர்நிலை அடையும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக வழமுடியும், வீட்டின் பொருளாதாரமும், நாட்டின் முன்னேற்றமும் உயர்வடையும் என பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

    விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×