என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா
- புரோகிதர்கள், முஸ்லீம் மத குருக்கள்,கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
- பொங்கலோ பொங்கல் என்று கூடியிருந்தவர்கள் முழங்கினர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.
துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து புரோகிதர்கள், முஸ்லீம் மத குருக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின ்போது,மண்பானைகளில் புத்தரிசி பொங்கலிட்டு, பொங்கல் பொங்கியதும், பொங்கலோ பொங்கல் என்று கூடியிருந்தவர்கள் முழங்கினர்.
தொடர்ந்து, சூரியனுக்கு பொங்கல் படைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் சர்க்கரைபொங்கல் வழங்கப்பட்டது. விழாவில், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதா, மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் பொங்கல் பண்டிகை சிறப்புகள் குறித்து பேசினர்.






