என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
- தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரியில் 30-வது மற்றும் 31-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த விழாக்களுக்கு அதியமான் கல்வி குழும ஆலோசகரும், முன்னாள் துணைவேந்தருமான முத்துச்செழியன் தலைமை தாங்கினார்.
எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி வரவேற்று பேசுகையில், இங்கு படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களைப் போன்று தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.
30 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை க்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசும்போது அப்துல்கலாமின் கனவுகாணுங்கள் எனும் வாசகத்தை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.
மேலும், ஒவ்வொரு முறையும் சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் வெற்றியடையலாம் என்று அறிவுறுத்தினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற 31-வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் துணைவேந்தரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பெண்ணியல் துறை இயக்குநருமான மணிமேகலை, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவ மாணவியர், நாளை செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்துமுடிக்க வேண்டும்,
ஒவ்வொரு மாணவனும் உயர்கல்வி கற்க வேண்டும். இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கல்வியில் உயர்நிலை அடையும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக வழமுடியும், வீட்டின் பொருளாதாரமும், நாட்டின் முன்னேற்றமும் உயர்வடையும் என பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.
விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






