search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் ஓட்டல் கடையில்  இட்லியால் சர்ச்சை
    X

    ஓசூரில் ஓட்டல் கடையில் இட்லியால் சர்ச்சை

    • இட்லியில் ரசாயனம் கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர்.
    • இட்லியை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் -ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ் 10-ல், வேடிப்பன் என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இங்கு விற்பனை செய்யப்படும், இட்லியை நேற்று முன்தினம் சிலர் வாங்கி சென்றனர்.

    அந்த இட்லி, பேக்கரியில் விற்கப்படும் பன், பிரட் போல் இருந்ததுடன், இட்லி சுவையாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள், இதுபோன்ற இட்லியை விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்தனர்.

    ஆனால், நேற்று காலையிலும், அதே சுவையுள்ள இட்லியை ஓட்டலில் விற்பனை செய்தனர். இதனால் அந்த ஹோட்டலை முற்றுகையிட்ட இளைஞர்கள் மூன்று நாட்கள் ஆனாலும் கெடாத இந்த இட்லியில் ரசாயனம் கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர்.

    அதற்கு ஓட்டல் நிர்வாகம் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஆமணக்கு விதை சேர்ப்பதால் இதுபோன்று இட்லி இருக்கிறது என்றது. மேலும் சானசந்திரத்தை சேர்ந்த ஒருவர்தான் ஒரு இட்லி 3 ரூபாய் என்ற விலையில் தங்களுக்கு விற்பதாகவும், ஓசூரின் பல ஹோட்டல்களில் இதுபோன்ற இட்லி தான் விற்பதாகவும் தெரிவித்தது.

    அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம், இட்லியை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    அதே நேரம் ஹோட்ட ல்களுக்கு இட்லி சப்ளை செய்யும் நபர் இட்லியை ஆய்வு செய்து கொள்ளுங்கள். என் குழந்தைக்கு கூட இதே இட்லியை தான் கொடுக்கி றேன் என கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்தால் ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×