என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரசம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய வாலிபர் உள்பட 6 பேர் கைது
    X

    நாகரசம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய வாலிபர் உள்பட 6 பேர் கைது

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சக்தி (வயது24), சுப்பிரமணி (29), ஆனந் (23), ரமேஷ் (30), சபரி (28), சிவக்குமார் (25) ஆகிய 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் ஒரு மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடியதாக வேலம்பட்டி அடுத்த அனகோடி பகுதியை சேர்ந்த மணி மகன் சக்தி (வயது24), எருமாம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (29), பட்டனூரை சேர்ந்த சண்முகம் மகன் ஆனந் (23), குட்டூரை சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (30), செல்லம்பட்டியை சேர்ந்த வேடியப்பன் மகன் சபரி (28), கூரம்பட்டியை சேர்ந்த சின்ராஸ் மகன் சிவக்குமார் (25) ஆகிய 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 2500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×