என் மலர்
கிருஷ்ணகிரி
- கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.
- பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பசவேஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை மூன்றாம் கால யாக பூஜை, கணபதி பூஜை, ஹோமங்கள், மகா தீபாராதனை, கும்ப கலச புறப்பாடு ஆகியவை நடந்தது.
காலை 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பசவேஸ்வர சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், கற்பூர தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பசவேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
- 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளி கோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹரிஹரனின் தந்தை சின்னசாமி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜி (வயது 72) என்பவர் மீது மாடு மோதியதில் படுக்காயம் அடைந்தார்.
- சிகிச்சைக்கான அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் கிராமத்தில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது 72) என்பவர் மீது மாடு மோதியதில் படுக்காயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தின் அவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து அவரது மகன் ரவி வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மகிழ்ச்சியுடன் காணும் பொங்கல் கொண்டாடினார்கள்.
- சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் முகாமிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 15-ந்தேதி பொங்கல் விழாவும், 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது.
நேற்று காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் காணும் பொங்கல் கொண்டாடினார்கள்.
அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்த பொதுமக்கள் அங்கிருந்த பூங்காவில் ஓய்வெடுத்தும், சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகளை விளையாட விட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அணைப் பகுதியில் உணவு சமைத்து உண்ட பிறகு அணையை சுற்றிப் பார்த்தனர். இதே போல், கிருஷ்ணகிரி அருகில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் முகாமிட்டனர்.
தொடர்ந்து படகுகளில் பயணம் செய்து மகிழ்ந்தனர். அதுபோல கிருஷ்ணகிரி நகரில் ஓட்டல்கள் உட்பட பெரும்பாலான கடைகளுக்கு நின்று விடுமுறை விடப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
- பல வருடங்களாக முயற்சித்தும் கைகூடவில்லை
- கிரிஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கிரிஜா (வயது 29).
இவருக்கு திருமணம் செய்து வைக்க பல வருடங்களாக முயற்சித்தும் கைகூடவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கிரிஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சீனிவாசன் தந்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விநாயகர் கோவில் முன்பு 145-வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.
- நாயுடுகள் நல சங்கம் , வாணியர் நல சங்கம் வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் எருதுகள் விடப்பட்டன.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் முன்பு 145-வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.
இதனை ஊர் கவுண்டர் மகேந்திரன் எருதுவிற்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இருபதுக்கும் மேற்பட்ட எருதுகள் கோயிலை சுற்றி வலம் வந்தன. எருதுகளை பிடிக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.
காவேரிப்பட்டினத்தை சுற்றியுள்ள கருகன்சாவடி, ஜமேதர் மேடு , நரிமேடு , சந்தாபுரம் ,காவேரிப்பட்டணம் மற்றும் நாயுடுகள் நல சங்கம் , வாணியர் நல சங்கம் வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் எருதுகள் விடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஊர் கவுண்டர் பெருமாள் சார்பாக ஊர் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வக்கீல் ரவிச்சந்திரன், சின்னசாமி, தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஜே .கே. எஸ். பாபு , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அருள், தவமணி,பசுபதி,சார்லஸ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் இருவருக்கு மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில்அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
- இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- 2 தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ளது கருங்கல் நகர். இப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், கண்ணன், மோகன் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
ஆம்பள்ளி காலனி அருகே சென்றபோது ஏன்இருசக்கர வாகனத்தை வேகமாக ஒட்டி வருகின்றீர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து கேட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கருங்கல் நகர் பகுதியினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் ஆம்பள்ளி காலனி பகுதியை சேர்ந்த ராமன், லட்சுமணன், சக்தினாதன் உள்பட 12 பேர் ஒன்பது இருசக்கர வாகனங்களில் கருங்கல் நகர் சென்று சீனிவாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அந்த ஊர் காரர்கள் சுற்றி வளைக்கவே இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
- எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் நாகராஜ், ஐ.டி. பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகர், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல் உள்பட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாரி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
- யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.
தேன்கனிகோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 50 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், காடுலக்கசந்திரம், தின்னூர் கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எதிர்பாராத விதமாக தவறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.
- நீரில் மூழ்கி ராஜா இறந்து விட்டது தெரிய வந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகேயுள்ள ொம்மதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 53).
விவசாயியான ராஜா நேற்று மதுபோதையில் குப்பநத்தம் ஏரி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காரபேட்டை பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது நீரில் மூழ்கி ராஜா இறந்து விட்டது தெரிய வந்தது.
அவரது உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி (வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலமரத்துபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளிகோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆம்பள்ளி காலனி அருகே சென்றபோது ஏன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வருகின்றீர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து கேட்டுள்ளனர்.
- இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருங்கல் நகர் பகுதியினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ளது கருங்கல் நகர். இப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், கண்ணன், மோகன் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
ஆம்பள்ளி காலனி அருகே சென்றபோது ஏன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வருகின்றீர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து கேட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருங்கல் நகர் பகுதியினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் ஆம்பள்ளி காலனி பகுதியை சேர்ந்த ராமன், லட்சுமணன், சக்தினாதன் உள்பட 12 பேர், 9 இருசக்கர வாகனங்களில் கருங்கல் நகர் சென்று சீனிவாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அந்த ஊர் காரர்கள் சுற்றி வளைக்கவே இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பையும் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.






