என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் நீச்சல் பழக சென்றபோது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
    X

    கிணற்றில் நீச்சல் பழக சென்றபோது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

    • மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கிருஷ்ணகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி (வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலமரத்துபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளிகோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×