என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரியில் தவறி விழுந்தவர் பலி"

    • எதிர்பாராத விதமாக தவறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.
    • நீரில் மூழ்கி ராஜா இறந்து விட்டது தெரிய வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகேயுள்ள ொம்மதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 53).

    விவசாயியான ராஜா நேற்று மதுபோதையில் குப்பநத்தம் ஏரி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.

    அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காரபேட்டை பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது நீரில் மூழ்கி ராஜா இறந்து விட்டது தெரிய வந்தது.

    அவரது உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×