என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாநில அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பல்வேறு கோரிகைகளை நிறைவற்ற கோரி மாநில அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் தங்களுடைய பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கண்டன முழக்கங்களையும், கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.
    • மார்வாடி சமூக மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சீர்வி சமாஜம் சார்பில் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவில் அருகே நியூ பாலாஜி நகரில், மாதாஜி அம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று, ஓசூர் காமராஜ் காலனியில் இருந்து மாதாஜி அம்பாள் கோவில் வரை கலச யாத்திரை நடைபெற்றது.

    இதில் 5,000 -க்கும் மேற்பட்ட மார்வாடி சமூக மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர். இதனால் அந்த பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தகராறில் காயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு மரணம் அடைந்தார்.
    • ஒய்வு பெற்ற ராணுவ வீரர் நல கூட்டமைப்பின் மாநில தலைவர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பேரூராட்சி, வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் நடந்த தகராறில் காயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு மரணம் அடைந்தார்.

    அவரது வீட்டிற்கு ஒய்வு பெற்ற ராணுவ வீரர் நல கூட்டமைப்பின் மாநில தலைவர்பழனியப்பன் நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரபு குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். மேலும் அவர்கள் தங்களது குடும்ப வாழ்வாதரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எங்கள் சங்கம் சார்பாக துறை சார்ந்த அலுவலர் களுக்கு கோரிக்கை மனுவாக ஏற்கனவே வழங்கியுள்ளோம். கோரிக்கையை பரிசீலிப்ப தாக அரசுத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இங்கு நடைபெற்ற இது போன்ற சம்பவம் இனிவரும் காலங்களில் நடக்க கூடாது. மேலும் இச்சம்பவத்தை அரசியல் ரீதியாக அணுக கூடாது. தற்போது அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விதவை நலகூட்டமைப்பின் மாநில தலைவர் தீபா மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கணவன், மனைவி இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள தொட்ட திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவபிரியா (வயது 25).

    இவருக்கும் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இந்நிலையில் 2-வது திருமணம் செய்து கொண்ட விஜய் தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீட்டின் சாவியை தர சொல்லி கேட்டு சிவபிரியாவிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.

    இது குறித்து சிவபிரியா கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 19-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சசிகலா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன் தீர்த்தம் அருகேயுள்ள மொட்டங்குறிச்சி புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவரது மனைவி சசிகலா (வயது 48).

    கடந்த 19-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சசிகலா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மகன் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் கோட்டை பகுதியை சேர்ந்த நவீன்குமார் தனது மனைவி சுமா (26) என்பவரை கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

    மேலும் ஓசூர் ரெயில்வே ஸ்டேசன் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மனைவி இவாஞ்சலின் விஜிதா (35) என்பவரை கடந்த 12-ந்தேதி முதல் காணவில்லை என்று ஹட்கோ போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    இந்த வகையில் பேகைபள்ளி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகள் நந்தினி (19) என்ற கல்லூரி மாணவி கடந்த 20-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • அலுவலகத்தில் இருந்த மானிட்டர் திருடப்பட்டிருந்தது.

    காவேரிப்பட்டணம் ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த எர்ர அள்ளியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்புறம் காவேரிப்பட்டினம் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ் உள்ளது. எர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சார்ந்த செந்தாமரை உள்ளார்.

    இந்நிலையில் நேற்று அலுவலகத்தை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுள்ளனர் .இன்று காலையில் அலுவலகம் பூட்டு இன்றி கதவு மட்டும் மூடப்பட்டு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது ஊராட்சி மன்ற தலைவர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவருடைய அறையில் இருந்த பீரோ மற்றும் ஊராட்சி மன்ற கிளர்க் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்தில் இருந்த மானிட்டர் திருடப்பட்டிருந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கடந்த வாரம் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் மின்விசை பம்பு பூட்டை உடைத்து நீரேற்றும் பம்பின் ஸ்டார்டர் திருடி கொண்டு சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 15000 இருக்கும்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கும் போது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே இரவில் தினமும் நிறைய வாலிபர்கள் அமர்ந்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நாங்கள் அந்த வாலிபர்களிடம் கூறினால் போதை போட்டு வந்து எங்களிடம் தகாத வார்த்தைகளில் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து எங்களுக்கும், எங்களது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேஷன் கடைகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • இருப்புகள் குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னணு எந்திரத்தை ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெல்லாரம்பள்ளி, மோரமடுகு, ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ரேஷன் கடைகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் ரேஷன் கடையை ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைகள் விவரங்கள், அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, உப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு விவரங்கள், இந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட பொருட்கள் இருப்புகள் குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னணு எந்திரத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் பெல்லாரம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர், நோயாளிகள் வருகை, மருந்துகள் இருப்புகள், மேல்சிகிச்சைகாக பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள் விவரங்கள், மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு மேற் கொண்டார்.

    இதை யடுத்து மோரமடுகு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பள்ளி சுற்றி தூய்மை பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்திடும் விதம் மற்றும் மாணவர்களின் கல்வித் திறனை கேட்டறிந்தார்.

    பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என ஆசிரியர்களை கலெக்டர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதுவரை அவர்களது போராட்டத்துக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உத்தனப்பள்ளி, நாகம ங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது.

    இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று 49-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து விவசா யிகள் பிச்சைக்காரர்கள் போல் மொட்டை அடித்து கொண்டு கையில் மண் சட்டி மற்றும் கழுத்தில் காய்கறி மாலை அணிந்தவாறு சூளகிரி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

    அப்போது கீரனப்பள்ளி அருகே தாசில்தார் அனிதா மனுவை பெற வந்தார். ஆனால் தாலுகா அலுவலகம் வந்து தான் மனு கொடுப்போம் என விவசாயிகள் கூறினர். தாலுகா அலுவலகம் வரை நடந்து சென்ற விவசாயிகள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

    நாளை விவசாயிகளின் போராட்டம் 50-வது நாளை எட்டும் சூழலில் இதுவரை அவர்களது போராட்டத்துக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மர்ம நபர்கள் முரளியை அரிவாளால் வெட்டி க்கொலை செய்தனர்.
    • ரவுடி சந்தீப் (22), சேகர் (26) ஆகிய 2 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவகானப்பள்ளி அருகே உள்ள சி.கே.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா. இவரது மகன் முரளி (வயது 30).

    இவர் மதகொண்டப்ப ள்ளியில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு உளிவீரனப்பள்ளி பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முரளியை அரிவாளால் வெட்டி க்கொலை செய்தனர்.

    இந்த கொலை குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முரளியை கொலை செய்தது உளிவீரனப்பள்ளியை சேர்ந்த சந்தீப் (22), அவரது கூட்டாளிகள் என தெரிய வந்தது.

    ரவுடியான இவர் மீது ஏற்கனவே மத்திகிரி போலீசில் 2021-ம் ஆண்டில் நடந்த ஒரு கொலை வழக்கு இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

    தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி வால்மீகி தெருவை சேர்ந்தவர் சசிதர் நாயகா (24). கடந்த 19-ந் தேதி இரவு முரளி, மோகன் (33), மஞ்சு (30) ஆகிய 3 பேரும் சாகரப்பள்ளி அருகே மது போதையில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கும், அங்கு வந்த சசிதர் நாயகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் சசிதர் நாயகாவை, முரளி தரப்பினர் கட்டையால் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த சசிதர் நாயகா ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சசிதர் நாயகா தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முரளி, மோகன், மஞ்சு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து சசிதர் நாயகாவின் நண்பரான பிரபல ரவுடி சந்தீப்புக்கு தகவல் தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் தனது நண்பர்களுடன் காரில் முரளியை பின் தொடர்ந்து சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்த கொலை தொடர்பாக ரவுடி சந்தீப் (22), சேகர் (26) ஆகிய 2 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.
    • சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள ஆவலப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை காண ஏராளமானோர் குவிந்து இருந்தனர். இந்த விழாவில் காளைகள் கூட்டத்தில் புகாதவாறு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது. இதில் மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் 3 பேரை காளை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வந்த ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரை போலீசார் அவரை கைது செய்தனர்.

    பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சமூக நீதி தின கருத்தரங்கம் நடைபெற்றது.
    • தலைமை நிலைய செயலாளர் கணேசன் வரவேற்றார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சமூக நீதி பாதுகாப்பு கவுன்சில் சார்பில், சமூக நீதி தின கருத்தரங்கம் நடைபெற்றது.

    ஓசூர் வசந்த் நகரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு, மாநில பொதுச்செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாநில இளைஞரணி நிர்வாகிகள் பிரபாகரன் ஆதவன், ஜெகதீஷ், உயர் மட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் கணேசன் வரவேற்றார்.

    இதில், மாநில பொருளாளர் முத்துசாமி, தமிழ்ப் பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, வக்கீல் சண்முகம் ஆகியோர் பேசினர்.முன்னதாக, ஓசூர் தாலுக்கா அலுவலகத்திலிருந்து, சமூக நீதி சுடர் ஏந்தியவாறு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

    இதனை மாநில தலைவர் கே.கே சாமி தலைமையில், செயல் தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைத்தார். மேலும் இதில் திருவாசகன், வெங்கடேசன், பூபதி, முனிரத்னா உள்ளிட்ட நிர்வாகிகள கலந்து கொண்டனர்.

    ×