என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓசூர் ஓட்டல் உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது
  X

  ஓசூர் ஓட்டல் உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மர்ம நபர்கள் முரளியை அரிவாளால் வெட்டி க்கொலை செய்தனர்.
  • ரவுடி சந்தீப் (22), சேகர் (26) ஆகிய 2 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

  ஓசூர்,

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவகானப்பள்ளி அருகே உள்ள சி.கே.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா. இவரது மகன் முரளி (வயது 30).

  இவர் மதகொண்டப்ப ள்ளியில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு உளிவீரனப்பள்ளி பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முரளியை அரிவாளால் வெட்டி க்கொலை செய்தனர்.

  இந்த கொலை குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முரளியை கொலை செய்தது உளிவீரனப்பள்ளியை சேர்ந்த சந்தீப் (22), அவரது கூட்டாளிகள் என தெரிய வந்தது.

  ரவுடியான இவர் மீது ஏற்கனவே மத்திகிரி போலீசில் 2021-ம் ஆண்டில் நடந்த ஒரு கொலை வழக்கு இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

  தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி வால்மீகி தெருவை சேர்ந்தவர் சசிதர் நாயகா (24). கடந்த 19-ந் தேதி இரவு முரளி, மோகன் (33), மஞ்சு (30) ஆகிய 3 பேரும் சாகரப்பள்ளி அருகே மது போதையில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கும், அங்கு வந்த சசிதர் நாயகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  இதில் சசிதர் நாயகாவை, முரளி தரப்பினர் கட்டையால் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த சசிதர் நாயகா ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சசிதர் நாயகா தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முரளி, மோகன், மஞ்சு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்று விசாரணை நடத்தினர்.

  இந்த சம்பவம் குறித்து சசிதர் நாயகாவின் நண்பரான பிரபல ரவுடி சந்தீப்புக்கு தகவல் தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் தனது நண்பர்களுடன் காரில் முரளியை பின் தொடர்ந்து சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

  இந்த கொலை தொடர்பாக ரவுடி சந்தீப் (22), சேகர் (26) ஆகிய 2 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×