என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருட்டு
- ஊராட்சி மன்ற தலைவர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
- அலுவலகத்தில் இருந்த மானிட்டர் திருடப்பட்டிருந்தது.
காவேரிப்பட்டணம் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த எர்ர அள்ளியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்புறம் காவேரிப்பட்டினம் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ் உள்ளது. எர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சார்ந்த செந்தாமரை உள்ளார்.
இந்நிலையில் நேற்று அலுவலகத்தை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுள்ளனர் .இன்று காலையில் அலுவலகம் பூட்டு இன்றி கதவு மட்டும் மூடப்பட்டு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது ஊராட்சி மன்ற தலைவர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவருடைய அறையில் இருந்த பீரோ மற்றும் ஊராட்சி மன்ற கிளர்க் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்தில் இருந்த மானிட்டர் திருடப்பட்டிருந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கடந்த வாரம் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் மின்விசை பம்பு பூட்டை உடைத்து நீரேற்றும் பம்பின் ஸ்டார்டர் திருடி கொண்டு சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 15000 இருக்கும்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கும் போது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே இரவில் தினமும் நிறைய வாலிபர்கள் அமர்ந்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நாங்கள் அந்த வாலிபர்களிடம் கூறினால் போதை போட்டு வந்து எங்களிடம் தகாத வார்த்தைகளில் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து எங்களுக்கும், எங்களது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.