எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞர் பலி

எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது.
எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞர் பலி
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள ஆவலப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை காண ஏராளமானோர் குவிந்து இருந்தனர். இந்த விழாவில் காளைகள் கூட்டத்தில் புகாதவாறு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது. இதில் மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 3 பேரை காளை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com