என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி, பாலக்கோடு பகுதிகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- மாநில அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பல்வேறு கோரிகைகளை நிறைவற்ற கோரி மாநில அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் தங்களுடைய பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கண்டன முழக்கங்களையும், கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






