என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி -முதியவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள தேவர்குட்டபள்ளி பகுதியை சேர்ந்த முதியவர் சென்னப்பா (வயது 84),

    இவர் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சின்னாறு பேடப்பள்ளி பிரிவுசாலையில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி -முதியவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீடடு கிருஷ்ணகிரி அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுதுதி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 31-ந் தேதி மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டு மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் உடனடியாக அவற்றின் மீது தீர்வு கண்டு உரிய ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்ல் நடைபெற உள்ளது.

    எனவே மின் வாரியத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுதுதி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளலாம். ஓய்வூதியர் மற்றும குடும்ப ஓய்வூதியர்களின் புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது. இதுவரை புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெறாதவர்கள், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் 31&ந் தேதி தங்களின் பி.பி.ஓ. நகலை காட்டி புதிய மருத்துவ அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 பேர் சேலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
    • கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவர்களை ஆஜர்படுத்த உள்ளனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சரண்யா (21) என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கிருஷ்ணகிரி அணை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

    அந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அன்றே சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நல்லூர் தொட்டதிம்மனஅள்ளி அருகே உளள முத்தம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த முரளி (20) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

    இந்த கொலை வழக்கில் சரண் அடைந்த சங்கர், நாகராஜ், முரளி ஆகிய 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவர்களை ஆஜர்படுத்த உள்ளனர்.

    நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • குடிபோதையில் கிரனிடம் அன்னியாளம் அருகே தகராறில் ஈடுபட்டு கையால் தாக்கியுள்ளார்.
    • போலீசார் மாதேஷ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள அன்னியாளம் பகுதியை சேர்ந்தவர் கிரண்(வயது20), இவர் அந்த பகுதியில் மினிவேனில் பால் கொள்முதல் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா மகன் மாதேஷ் (34) என்பவர் குடிபோதையில் கிரனிடம் அன்னியாளம் அருகே தகராறில் ஈடுபட்டு கையால் தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த கிரணை தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சிக்சைக்கு சேர்த்தனர். இது குறித்து போலீசார் மாதேஷ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குளத்தில் நீச்சல் பழகும் போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்
    • அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த பார்த்தீபன். இவரது மகன் சாந்தகுமார் (வயது 18) இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.

    இந்த நிலையில் நீச்சல் கற்றுகொள்ளும் ஆர்வத்தில் குமுதேப்பள்ளி தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே உள்ள குளத்தில் நீச்சல் பழகும் போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
    • மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (வயது28), இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரகு இறந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • யுகாதிபண்டிகை கொண்டாடத்தில் கலர்பொடியை பஸ் டிரைவர் மீதும் பேருந்திலும் கலர்பொடி பூசியுள்ளனர்.
    • 4பேரும் சேர்ந்து டிரைவரை கையால் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி காவேரிநகர் பகுதியை சேர்ந்த ஜலபதி (வயது 49). இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ஒசூர்- ராமன்தொட்டிக்கு பயணிகளை ஏற்றிகொண்டு காளிங்கவரம் அருகே செல்லும்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யுகாதிபண்டிகை கொண்டாடத்தில் கலர்பொடியை பஸ் டிரைவர் மீதும் பேருந்திலும் கலர்பொடி பூசியுள்ளனர்.

    இதனைகேள்வி கேட்ட டிரைவரை ஆறுப்பள்ளி சண்முகம் (19), செம்பரசனப்பள்ளி ஆனந்த் (24), அருண்(20), காளிங்கவரம் மஞ்சு (19) ஆகிய 4பேரும் சேர்ந்து டிரைவரை கையால் தாக்கியுள்ளனர்.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியளித்தபடி உடனே அமல்படுத்த வேண்டும்.
    • உறுதியளித்தபடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன், பட்டதாரி ஆசிரியர் கழகம் நாராயணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குருநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    மனித சங்கிலி போராட்டத்தில், சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, 2003 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியளித்தபடி உடனே அமல்படுத்த வேண்டும். 2003, 2004-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    உறுதியளித்தபடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல், ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் 10 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • குறுகியகால சிகிச்சை முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு மருந்து, மத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், உலக காசநோய் தினத்தையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வு பேரணி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக மாவட்ட விளையாட்டரங்கில் முடிவடைந்தது.

    இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ந் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ராபாட் காக் என்ற விஞ்ஞானி காச நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்த தினத்தை நினைவு கூறும் வகையில் மார்ச் 24-ந் தேதி நாள் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் 10 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காசநோய் கண்டறிய மாவட்டத்தில் உள்ள 45 நுண்நோக்கி மையங்கள் செயல்படுகிறது.

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை மற்றும் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில், காசநோய் கண்டறியும் உயர் தர கருவியின் மூலம் சுமார் 34,530 சளி பரிசோதனைகள் மூலம் 1,264 நுரையீரல் காசநோய் நோயாளிகள் மற்றும் 414 நுரையீரல் சாரா காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    காசநோய் கண்டறியப்பட்ட 1,678 நோயாளிகளில் 1,497 நோயாளிகளுக்கு நேரடி பணபரிமாற்றம் மூலம் மாதம் ரூ.500 சிகிச்சை காலம் முழுவதும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊட்டசத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு காசநோய் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றதில் சுமார் 34,582 நபர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களில் சுமார் 1,152 நபர்களுக்கு சளி மாதிரிகள் பெறப்பட்டதில் 24 நுரையீரல் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடி குறுகியகால சிகிச்சை முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு மருந்து, மத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்க இலக்கு எய்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுகந்தா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், செரிப் மற்றும் மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்த பெயிண்ட், எலக்ரீக்கல் ஆகிய விலையுயர்ந்த பொருட்களை 2 பேர் திருடியுள்ளனர்.
    • கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்துள்ள புதுகொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், ராஜ்குமார். இவர்கள் இருவரும் பெயிண்டர்கள் ஆவர்.

    இந்த நிலையில் நேற்று போச்சம்பள்ளி அருகேயுள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுகுணா அம்மன்ராஜா வீட்டில் வெள்ளை அடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெயிண்ட், எலக்ரீக்கல் ஆகிய விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர். இதனை பார்த்த சுகுணா அவர்களை கையும் களவுமாக பிடித்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.

    இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். 

    • 22-ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் வழிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • 2 பேரும் சேர்ந்து கோவிந்தியை கையால் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள வளத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அழகேசன், இவரது மனைவி கோவிந்தி (வயது40), அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் வேடியப்பன் (47), இவர்களுடைய நிலம் அருகே அருகே உள்ளது. இதில் வழிப்பிரச்சினை நீண்ட நாட்களாக தீர்க்கபடாமல் இருந்து வருகிறது.

    இதனையடுத்து கடந்த 22-ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் வழிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் வேடியப்பன் மற்றும் அவரது மனைவி சாந்தி(42) ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவிந்தியை கையால் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த கோவிந்தி ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேடியப்பனை கைது செய்தனர்.

    • சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.

    சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், வட்ட தலைவர் சரவணன், செயலாளர் முத்துராமன், பொருளாளர் இளவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். முன்னதாக கோட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். முடிவில், மாவட்ட துணை செயலாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×