search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
    X

    சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

    • 2 பேர் சேலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
    • கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவர்களை ஆஜர்படுத்த உள்ளனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சரண்யா (21) என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கிருஷ்ணகிரி அணை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

    அந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அன்றே சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நல்லூர் தொட்டதிம்மனஅள்ளி அருகே உளள முத்தம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த முரளி (20) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

    இந்த கொலை வழக்கில் சரண் அடைந்த சங்கர், நாகராஜ், முரளி ஆகிய 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவர்களை ஆஜர்படுத்த உள்ளனர்.

    நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×