என் மலர்
நீங்கள் தேடியது "உயிரை மாய்த்த கூலி தொழிலாளி"
- திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
- மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (வயது28), இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரகு இறந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






