என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் வீட்டில் பொருட்கள் திருடிய பெயிண்டர்கள் 2 பேர் கைது
- வீட்டில் இருந்த பெயிண்ட், எலக்ரீக்கல் ஆகிய விலையுயர்ந்த பொருட்களை 2 பேர் திருடியுள்ளனர்.
- கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்துள்ள புதுகொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், ராஜ்குமார். இவர்கள் இருவரும் பெயிண்டர்கள் ஆவர்.
இந்த நிலையில் நேற்று போச்சம்பள்ளி அருகேயுள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுகுணா அம்மன்ராஜா வீட்டில் வெள்ளை அடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெயிண்ட், எலக்ரீக்கல் ஆகிய விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர். இதனை பார்த்த சுகுணா அவர்களை கையும் களவுமாக பிடித்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.
இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story






