என் மலர்
கிருஷ்ணகிரி
- அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகளுக்கு தேர்வர்கள் வருகிற ஏப்ரல் 3ம் தேதிக்குள் இணைவழியில் விண்ணப்பிக்கலாம்.
- குரல் தேர்வு வருகிற ஏப்ரல் 28-ந் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னையில் மட்டுமே நடைபெறும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தினால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகளுக்கு தேர்வர்கள் வருகிற ஏப்ரல் 3ம் தேதிக்குள் இணைவழியில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு ள்ளதாவது:
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
மேற்படி அரையாண்டு தேர்வுகள், அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கென மொழித்தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், குரல் தேர்வு வருகிற ஏப்ரல் 28-ந் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னையில் மட்டுமே நடைபெறும்.
இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் மூலம் வருகிற ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேர்வுகட்டணமாக பிரதிதேர்வு மொழிக்கு ரூ.5 எனவும், தட்டச்சு செய்ய ப்பட்ட எழுத்துப்பூர்வ மாக அனுப்ப ப்பட்ட நகலெடு க்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேற்படி தேர்வுகள் தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- இதனை பொது மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
- சூளகிரி வட்டாரத்தில் மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருகை தந்து சாலை ஒரம் முகாமிட்டுள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சூளகிரி, பேரிகை, அத்திமுகம், காமன்தொட்டி மற்றும் பல பகுதிகளுக்கு வருகை தந்து சாலை ஒரம் முகாமிட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரங்களில் தங்கி இரும்பு சாமான்கள், விவசாயி களுக்கு தேவையான அரிவால், கத்தி, உழி, சுத்தி ஆகிய பொருட்களை விற்பனை செய்து வருகி ன்றனர். இதனை பொது மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
- இந்த அறுவை சிகிச்சைக்கு மற்ற தனியார் மருத்துவமனைகளில் ரூ 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும்.
- முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் குழு, விபத்தில் கால் செயலிழந்த நோயாளி ஒருவருக்கு 6 மணி நேரத்திற்குள் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக, மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிதரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயதான, கம்பி வளைக்கும் கட்டிட தொழிலாளி ஒருவர், கடந்த 21-ந்தேதி, பணியிடத்தில், சுமார் 30 அடி உயர கட்டிடத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு பகுதியில் பலத்த காயமடைந்தார். இரு கால்களின் பலவீனத்துடன் இருந்த அவர், 2 மணி நேரத்தில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு எனது தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். மேலும் தற்போதைய அமெரிக்க முதுகுத்தண்டு காயங்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, அவரது உயிர் நிலைகள் நிலைப்படுத்தப்பட்டு, பின்னர் அவசர முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முதுகுத்தண்டுவடத்தின் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது முதுகுத்தண்டுவடத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்தது, அறுவை சிகிச்சையில் அது நிவர்த்தி செய்யப்பட்டது. இரண்டரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நோயாளி பக்கவாதத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து அன்றுமாலை 6 மணியளவில் நடக்க வைக்கப்பட்டார். முதுகுத்தண்டு வட முறிவு ஏற்பட்ட 6-12 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யும்போது குணமடையும் வாய்ப்புகள் அதிகம். இந்த அறுவை சிகிச்சைக்கு மற்ற தனியார் மருத்துவமனைகளில் ரூ 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் ரூ.50,000 முதல் 1 லட்சம் வரைதான் செலவாகும். அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, நோயாளிகள் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி தாளாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக், மருத்துவ அலுவலர் டாக்டர். பார்வதி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அரசம்பட்டி தேங்காய் மற்றும் பன்னீர் ரோஜாவிற்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது.
- கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்தி இருக்கும்,
தி.மு.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தேர்தல் அறிக்கையில் கொடுக்காத எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டி திராவிட மாடல் ஆட்சி நாயகன் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் சீரிய திட்டம் மற்றும் வேளாண்மை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்தும்,
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி தேங்காய் மற்றும் பன்னீர் ரோஜாவிற்கு புவிசார் குறியீடு அறிவித்தது, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சராக அறிவித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்களுக்கு,
கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையிலான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட அவை த்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலா ளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் கதிரவன் வரவேற்புரையாற்றினார்.
இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் டாக்டர்.விஜய், பர்கூர் தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் செங்குட்டுவன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுகவனம், தீர்மானக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரிதாநவாப், செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்ரா சந்திரசேகர், அஸ்லாம், நாகராசன், பாலன், கோதண்டன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, அன்பரசன், டாக்டர்.தென்னரசு, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், சுப்பிரமணி, நரசிம்மன், ராஜேந்திரன், செல்வம், சாந்தமூர்த்தி, மகேந்திரன், குமரேசன், ரஜினிசெல்வம், குண.வசந்தரசு, அறிஞர், பேரூர் செயலாளர்கள் பாபு, பாபுசிவக்குமார், தம்பிதுரை, வெங்கட்டப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பரவலாக மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி, பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை, மத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழையால் நேற்று வெயில் தணிந்து காணப்பட்டது.
நேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 442 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 328 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.
- சந்தேகத்தற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தினர்.
- 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிராஜன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி செந்தில் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தினர்.
அதில் கிருஷ்ணகிரி செட்டியம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சஞ்சய்(வயது19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
- விசாரனை நடத்தியதில் தருமபுரி ரயில்வே காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது37) என்பது தெரியவந்தது,
- லாட்டரி சீட்டுகள், பணம் ரூ.250 யை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் திருப்பதூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியதில் தருமபுரி ரயில்வே காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது37) என்பது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் ரூ.250 யை பறிமுதல் செய்தனர்.
- இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்த போது நிலை தடுமாறி இருவரும் பைக்குடன் கவிழ்ந்தனர்.
- முருகம்மாள் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்காவரம் பகுதியை சேர்ந்த பெருமாள். இவரது மனைவி முருகம்மாள்( 45), இவருடைய மகன் ஜெகதீஷ்(22), இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் கங்கலேரி அருகே வரும் போது வேகமாக வந்த போது நிலை தடுமாறி இருவரும் பைக்குடன் கவிழ்ந்தனர்.
இதில் முருகம்மாள் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாபெரும் வேலைவாய்ப்பு முகம் வருகிற 31-ந் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் (அரசு ஐ,டி.ஐ பின்புறம்) நடைபெற உள்ளது.
- தனித்தனியே அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட இயக்கு மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், மாபெரும் தனியார் துறைகளின் மூலம் வருகிற 31-ந் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகம் வருகிற 31-ந் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் (அரசு ஐ,டி.ஐ பின்புறம்) நடைபெற உள்ளது.
இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு குறித்து பதிவு செய்தல், ஆதார் எண்ணை தேர்தல் அடையாள அட்டையுடன் இணைத்தல், பல்வேறு திட்டத்தின் கீழ் திறன் வளர்ச்சி பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு மற்றும் வங்கி கடன் பெற ஆலோசனை ஆகியவைகளுக்கும் தனித்தனியே அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8220380619 மற்றும் 9843091546 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஓசூர் மநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் ரூ.2 ஆயிரத்து 500 யை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் மாடரஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவி (25), ராம்குமார் (33) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் ரூ.2 ஆயிரத்து 500 யை பறிமுதல் செய்தனர்.
- விக்னேஷ் மற்றும் அவரது தம்பி சக்தி(20), உறவினர் மணிகன்டன்(29), ஆகிய 3 பேரையும் அருண்குமார், மதன் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் மற்றும் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி காமாச்சிபுரம் பகுதியை சேர்ந்த வர் விக்னேஷ்(வயது24). இவருக்கும் ஜெகதேவி ஜெ,ஜெ.காலணி பகுதியை சேர்ந்த அருண்குமார், காமாச்சிபுரம் மதன் இவர்களுக்குள் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 21-ம் தேதி ஜெகதேவியில் எருது விடும் விழாவில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் மற்றும் அவரது தம்பி சக்தி(20), உறவினர் மணிகன்டன்(29), ஆகிய 3 பேரையும் அருண்குமார், மதன் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த சக்தி பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். பின்னர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் மற்றும் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பேரூராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.
- வீடுகள் வரிபாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் வரிபாக்கியை செலுத்த வேண்டும்
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு சொந்தமாக பாலக்கோடு ரோடு சந்தை, மற்றும் பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில் பேரூராட்சிக்கு வரிபாக்கி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து வரிபாக்கி வசூல் செய்யும் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளங்கோ மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கூறுகையில் காவேரிபட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளும் மற்றும் வீடுகள் வரிபாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் வரிபாக்கியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






