என் மலர்
கிருஷ்ணகிரி
- 7 கிராம தேவதைகள், மாரசந்திரம் கிராமத்திற்கு பக்தர்களால் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
- திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மாரச்சந்திரம் கிராமத்தில், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி வாழவும், கிராம தேவ தைகளுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு லக்கசந்திரம், தேர்பேட்டை, மாரச்சந்திரம், தொட்டி, தேன்கனிக்கோட்டை, ஜார்க்கலட்டி, திம்ம சந்திரம் ஆகிய 7 கிராமங்களில் இருந்து மாரியம்மன், முத்தாலம்மன், முத்தப்பா, பாலகுளி மாரியம்மா, செல்லாபுரியம்மா கங்கம்மா, லக்கசந்திரம் மாரியம்மன் ஆகிய 7 கிராம தேவதைகள், மாரசந்திரம் கிராமத்திற்கு பக்தர்களால் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் கிராம தேவதைகளை பல்லக்கில் சுமந்துசென்று, அக்னி குண்டத்தில் இறங்கினர்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விழா நடைபெற்றது.இதில் தேன்கனிகோட்டை பகுதி சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
- கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
- ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் பாதிக்கப்படவுள்ள பகுதிகளுக்கான கிராம, வார்டு அளவிலான வரைப்படங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்கள் முழுமையாக தணிக்கை செய்து, தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
புதியதாக பாதிக்கப்படவுள்ள பகுதி ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபர்கள் விவரங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள் விபரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரகால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்பரேஷன் நிறவனங்கள் ஆகியோர் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும்.
பேரிடமர் மீட்பு மற்றும் வெளியேற்றுத்தல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் ஜே.சி.பி, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், அவை உள்ள இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விபரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.
மேலும், அனைத்து துறை அரசு அலுவலர்களும் மழை, வெள்ளம், புயல், இடி மின்னல் போன்ற பேரிடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முன்னெச்சரிக்கை செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தென்மேற்கு பருவமழையின் போது, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையில், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடம் மேலாண்மைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, டிஎஸ்பி தமிழரசி, நிர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
- விஜய் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இன்று அதிகாலை 5 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை கொல்லப்பள்ளி பகுதியில் பெங்களுரில் இருந்து காய்கறி ஏற்றி கொண்டு மினிலாரி கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரியில் இருந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் (வயது27) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் ஜெயசேகரா (26). இவரும், இவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சூளகிரி அருகேயுள்ள கோனேரிபள்ளி என்கிற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஜெயசேகரா சம்பவ இடத்திேலயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓசூருக்கு சென்ற கார் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் பலியானார்.
- காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு பழனியில் இருந்து ஓசூருக்கு சென்ற கார் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சாலை விபத்தில் பலியான முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
- தீவிபத்து தடுப்பு தொடர்பான செயல் விளக்கப்பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
- நூற்றுக்கணக்கான பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒசூர்,
பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆண்டாய்வு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஓசூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில், நடைபெற்றது.
இதில் ஒசூர் சப்-கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன், ஒசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த், ஓசூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்தனர்.
இந்நிகழ்வின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி தொடர்பாக, தீயணைப்பு துறை அலுவலர் நாகவிஜயன் தலைமையில் தீயணைப்பு துறையினரால் தீவிபத்து தடுப்பு தொடர்பான செயல் விளக்கப்பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
இதன் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிவாகன ஓட்டுநர்களுக்கும், உதவியாளர்களுக்கும் மாவட்ட கலெக்டர், ஒசூர் சப்-கலெக்டர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் ஆகியோர் விபத்தில்லாமல் வாகனம் இயக்குவது குறித்து அறிவுறுத்தினார்கள்.
முதல் கட்டமாக 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 204 பள்ளி வாகனங்கள் தகுதி உடையதாகவும், 11 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சரிசெய்து மீள ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
- சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.
- ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகமரை ஏமனூர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (வயது 48). கூலிதொழிலாளியான இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேற்கூரை போடும் பணிக்காக சென்றார். அங்கு சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கமலேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வருகிற 25-ந் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
- தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது அரசு இ-சேவை மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணிகள், ரயில்வே பணிகள் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வருகிற 25-ந் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலம் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இப்பயிற்சில் சேர தங்களுடைய சரியான, முழு விவரங்களை கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது அரசு இ-சேவை மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுமு மைய தொலைபேசி எண். 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதலில் புதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இம்மாவட்டத்தில் உள்ள போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைத்து இளைஞர்களும் காலதாமதமின்றி விரைவில் பதிவு செய்யமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக தியாகராஜன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார்.
- மனமுடைந்து காணப்பட்ட தியாகராஜன் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது38). இவர் ஓசூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த தின்னூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது31). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார். இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று கிடந்தது.
- இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மாரனபள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷூக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் அங்கு விரைந்து வந்து முதியவரின் உடலை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்கியிருக்கும் அறை 3-வது மாடிக்கு செல்லும்போது செல்போன் பேசிகொண்டே சென்றார்.
- பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நந்துராய் (வயது24). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சிப்காட் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நந்துராய் சம்பவத்தன்று காலையில் தங்கியிருக்கும் அறை 3-வது மாடிக்கு செல்லும்போது செல்போன் பேசிகொண்டே சென்றார். அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனமுடைந்த காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது38). இவர் ஓசூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த தின்னூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது31). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார். இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அகழாய்வு குறித்து மாதிரி நிகழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
- வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்து றையுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது.
இந்த கோடைகால முகாமில் குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம் மற்றும் மாதிரி அகழ்வாராயச்சி, தொழில்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு மற்றும் பல வகையான செயல்பாடுகள் வழங்கப்படும்.
இந்த முகாம் நேற்று தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாமின் முதல் நாளான நேற்று கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறுக்கி கிராமத்தில் காலபைவரவர் மலையில் உள்ள இருளன் கவியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்ததார்.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அகழாய்வு குறித்து மாதிரி நிகழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரகுமார், தனி தாசில்தார் விஜயகுமார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
நாளை (15ம் தேதி) கொய்மலர்கள் சாகுபடி மையம், டான்புளோரா மலர் உற்பத்தி மையம், 17ம் தேதி ஓசூரில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை பார்வையிட டைட்டான் நிறுவனம், அசோக் லைலேண்ட் நிறுவனம், 18ம் தேதி அரசு மருதுவக் கல்லூரி மருத்துவமனை, 19ம் தேதி ஊட்டச்சத்து இளம் ஆய்வு தலைப்பில் பெங்களூர் விஸ்வராய அருங்காட்சியகம், குப்பம் இண்டர்நேஷ்னல் பவுண்டேசன், 22ம் தேதி மத்திகிரி கால்நடை பண்ணை மறறும் ஓசூர் மாநகராட்சியும், 24ம் தேதி அய்யூரில் வனத்துறையிடனருடான கலந்துரையாடல் கூட்டம், 26ம் தேதியன்று கிருஷ்ணகிரி அணை பூங்காவில் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் இரண்டு குழுக்களாக மொத்தம் 660 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட உள்ளனர்.






