என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு விபத்துக்களில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
- முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
- விஜய் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இன்று அதிகாலை 5 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை கொல்லப்பள்ளி பகுதியில் பெங்களுரில் இருந்து காய்கறி ஏற்றி கொண்டு மினிலாரி கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரியில் இருந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் (வயது27) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் ஜெயசேகரா (26). இவரும், இவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சூளகிரி அருகேயுள்ள கோனேரிபள்ளி என்கிற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஜெயசேகரா சம்பவ இடத்திேலயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






