வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி பெண் உள்பட 2 பேர் சாவு

கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.மனமுடைந்த காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி பெண் உள்பட 2 பேர் சாவு
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது38). இவர் ஓசூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த தின்னூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது31). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார். இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com