என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒசூரில் தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
- தீவிபத்து தடுப்பு தொடர்பான செயல் விளக்கப்பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
- நூற்றுக்கணக்கான பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒசூர்,
பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆண்டாய்வு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஓசூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில், நடைபெற்றது.
இதில் ஒசூர் சப்-கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன், ஒசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த், ஓசூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்தனர்.
இந்நிகழ்வின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி தொடர்பாக, தீயணைப்பு துறை அலுவலர் நாகவிஜயன் தலைமையில் தீயணைப்பு துறையினரால் தீவிபத்து தடுப்பு தொடர்பான செயல் விளக்கப்பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
இதன் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிவாகன ஓட்டுநர்களுக்கும், உதவியாளர்களுக்கும் மாவட்ட கலெக்டர், ஒசூர் சப்-கலெக்டர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் ஆகியோர் விபத்தில்லாமல் வாகனம் இயக்குவது குறித்து அறிவுறுத்தினார்கள்.
முதல் கட்டமாக 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 204 பள்ளி வாகனங்கள் தகுதி உடையதாகவும், 11 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சரிசெய்து மீள ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.






