என் மலர்
கிருஷ்ணகிரி
- லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது.
- வாகனங்கள் ஜல்லி மீது ஏறுவதால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு தொழில்சாலைகள், வீடுகள், மற்றும் அரசு பணிகளுக்கும் அதிக அளவில் சிமெண்ட் ஐல்லி கலவை லாரிகள் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-பேரிகை சாலை மற்றும் சூளகிரி- உத்தனப்பள்ளி சாலை என பல்வேறு சாலைகளில் செல்கிறது.
லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது. இதனால் வாகனங்கள் ஜல்லி மீது ஏறுவதால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது.
ஜல்லி கலவைகள் ஏற்றி செல்லும் லாரிகள் சாலையில் ஜல்லி கற்கள் சிதராதவாறு தார்பாய்களை மூடி கொண்டு செல்ல வேண்டும். இதனை மீறினால் அந்த வாகனங்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- அந்த வழியாக வந்த ஒற்றை யானை தாக்கி தூக்கி வீசியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது67). விவசாயியான இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள வனபகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர்.
இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.
இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.
- நேற்று லட்சுமி சிலைக்கு முன்பாக வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- கலச குடத்தில் இருந்த புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட போது, நகராட்சி அலுவலக வளாகத்தின் முன், லட்சுமி சிலை வைக்கப்பட்டு, நகராட்சி அலுவலர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று லட்சுமி சிலைக்கு முன்பாக வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையொட்டி நகராட்சி ஆணையாளர் வசந்தி, பூஜை செய்யப்பட்ட கலச குடத்தை சுமந்து சாமி சிலையை வலம் வந்தார். பின்னர் கலச குடத்தில் இருந்த புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி இளநிலை உதவியாளர்கள் அறிவழகன், செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் செந்தில்குமார் செழியன், மின் பணியாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் வசந்தி கூறுகையில், இங்கு லட்சுமி சிலை மட்டும் இங்கு இருந்தது. இங்கு பல பிரச்சினைகள் நடந்துள்ளது. ஆகவே பிரச்சினைகள் நீங்கி, அனைத்தும் சுமூகமாக நடக்கவும், குழப்பங்கள் நீங்கி அனைவரும் நன்றாக இருக்கவும், பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டியும் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்றார்.
- 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர். இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.
இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.
- கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
- மொத்தம் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓசூரை அடுத்த பேரிகை பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அங்கு சென்று சோதனை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது35) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டபோது பாராண்டபள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), ராசுவீதியைச் சேர்ந்த யுவராஜ் (45), சூளகிரியை அடுத்த மூக்காண்டபள்ளியைச் சேர்ந்த சாத்தப்பா (50), பாலகுறியைச் சேர்ந்த தனுஷ் (22), ஓசூரை அடுத்த தின்னூரைச் சேர்ந்த சரண் (23) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று சோதனையில் ஈடுபட்டதில் கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- அசன் ராஜா, சுயேபுதீன், இத்ரீஸ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாநில செயலாளர் அன்வர், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர தலைவர் பால்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா வட்டார தலைவர்கள் அன்புநாதன், லாசர், முனிசாமி ரெட்டி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மஞ்சு , அசன் ராஜா. சுயேபுதீன், இத்ரீஸ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
- விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது.
- மனவேதனை அடைந்த மாரியப்பன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பென்டரஅள்ளி ஏ.மோட்டூரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது57).
விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மாரியப்பன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- தலையில் பலத்த காயமடைந்த நாராயணப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காலட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணப்பா (வயது52). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நாராயணப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுசம்பவம் குறித்து சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நாராயணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்ரா சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடந்தன.
- சிவலிங்க சுவாமிக்கு அபிேஷக ஆராதனை மற்றும் பூஜையும், மாலை கொடி இறக்குதலும் நடைபெற உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த பெத்தமேலுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலில், 68வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு அஷ்டமி திதி, அவிட்ட நட்சத்திரத்தில் விநாயகருக்கு அபிேஷக ஆராதானை மற்றும் பூஜையும், மாலை 6 மணிக்கு சுவாமிகளின் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தன.
தொடர்ந்து கனகமுட்லு சுவாமி பூஜைகள், ஈரோஜிராவ் தர்மகர்த்தா சமாதி பூஜைகள், வெங்கடேஸ்வரா சுவாமி, சீரடி சாய்பாபா, சுப்பிரமணியர் சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவிகளில் அபிேஷக ஆராதனை, பூஜைகள் மற்றும் மஹா மங்களார்த்தியும் நடைபெற்றன.
நேற்று காலை வெங்கடேஸ்வரா சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, பூஜைகளும் தொடர்ந்து 10.30 மணிக்கு சீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்ரா சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடந்தன.
11 மணிக்கு கருட கம்ப பூஜைகள், தள்கி பூஜைகள், மதியம் அன்னதானம், மாலை வெங்கடேஸ்வரா சுவாமி திருவீதி உலாவும், மங்களார்த்தியும் நடைபெற்றன. இன்று (மே 15) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிவலிங்க சுவாமிக்கு அபிேஷக ஆராதனை மற்றும் பூஜையும், மாலை கொடி இறக்குதலும் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை பெத்தமேலுப்பள்ளி ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
- வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தலா 9 லட்சம் ரூபாய் வீதம் 5 பஞ்சாயத்து தலைவர்களிடம் பவர் டிரில்லருடன் கூடிய 5 டிராக்டர்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், 15-வது மானிய நிதிக் குழு மானியத்தில், பஞ்சாயத்தில் துாய்மைப் பணி மேற்கொள்வதற்காகவும், பொதுவாக தீர்மானம் நிறைவேற்றி டிராக்டர்களை வாடகை உள்ளிட்ட பணிகள் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், அகசிப்பள்ளி, பெத்ததாளாப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெரியமுத்துார், வெங்கடாபுரம் ஆகிய 5 பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை வகித்து, தலா 9 லட்சம் ரூபாய் வீதம் 5 பஞ்சாயத்து தலைவர்களிடம் பவர் டிரில்லருடன் கூடிய 5 டிராக்டர்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கண்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் நாராயணன், பானுப்பிரியா நாராயணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காணத்தக்க கிருஷ்ணகிரி" என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
- மெட்ரை அருவி மற்றும் மல்லிகார்ஜூன துர்க்கம் கோயில் ஆகிய இடங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்படுத்தும் விதமாக "காணத்தக்க கிருஷ்ணகிரி" என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 7 மணிக்கு அஞ்செட்டி வட்டம், குந்துக்கோட்டை அருகிலுள்ள பூதட்டி கொட்டாய் கிராமத்தில் உள்ள மெட்ரை அருவி மற்றும் மல்லிகார்ஜூன துர்க்கம் கோயில் ஆகிய இடங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
இப்பயணத்தில் ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா , மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயானி மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி, அஞ்செட்டி தாசில்தார் அனிதா, தனி வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோருடன் இப்பயணத்தில் கலந்துக்கொண்டனர்.






