என் மலர்
உள்ளூர் செய்திகள்

5 பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி
- வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தலா 9 லட்சம் ரூபாய் வீதம் 5 பஞ்சாயத்து தலைவர்களிடம் பவர் டிரில்லருடன் கூடிய 5 டிராக்டர்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், 15-வது மானிய நிதிக் குழு மானியத்தில், பஞ்சாயத்தில் துாய்மைப் பணி மேற்கொள்வதற்காகவும், பொதுவாக தீர்மானம் நிறைவேற்றி டிராக்டர்களை வாடகை உள்ளிட்ட பணிகள் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், அகசிப்பள்ளி, பெத்ததாளாப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெரியமுத்துார், வெங்கடாபுரம் ஆகிய 5 பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை வகித்து, தலா 9 லட்சம் ரூபாய் வீதம் 5 பஞ்சாயத்து தலைவர்களிடம் பவர் டிரில்லருடன் கூடிய 5 டிராக்டர்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கண்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் நாராயணன், பானுப்பிரியா நாராயணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






