என் மலர்
நீங்கள் தேடியது "டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி"
- சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 குப்பை எடுக்கும் டிராக்டர், வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்கும் டிராக்டர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 குப்பை எடுக்கும் டிராக்டர், வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் பேரண்டபள்ளி, சூளகிரி, பேரிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்கும் டிராக்டர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல் ரவிக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா பாக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்விராஜா ராஜம், பேரண்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, ஊராட்சி துணைத் தலைவர் நஞ்சப்பா, செயலர் செல்வராஜ், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், பேரிகை ஊராட்சி மன்ற தலைவர் பிரவின்குமார், கட்சி நிர்வாகிகள் ராமசந்திரன் ஹரி, செல்வம், சித்ராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.
- வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தலா 9 லட்சம் ரூபாய் வீதம் 5 பஞ்சாயத்து தலைவர்களிடம் பவர் டிரில்லருடன் கூடிய 5 டிராக்டர்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், 15-வது மானிய நிதிக் குழு மானியத்தில், பஞ்சாயத்தில் துாய்மைப் பணி மேற்கொள்வதற்காகவும், பொதுவாக தீர்மானம் நிறைவேற்றி டிராக்டர்களை வாடகை உள்ளிட்ட பணிகள் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், அகசிப்பள்ளி, பெத்ததாளாப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெரியமுத்துார், வெங்கடாபுரம் ஆகிய 5 பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை வகித்து, தலா 9 லட்சம் ரூபாய் வீதம் 5 பஞ்சாயத்து தலைவர்களிடம் பவர் டிரில்லருடன் கூடிய 5 டிராக்டர்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கண்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் நாராயணன், பானுப்பிரியா நாராயணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






