அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று கிடந்தது.இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மாரனபள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷூக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் அங்கு விரைந்து வந்து முதியவரின் உடலை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com