என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆயிரம் ஆண்டுபழமையான பாறை ஓவியங்கள்
    X

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி கிராமம், காலபைரவர் மலையில் உள்ள இருளன் கவியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் நிகழ்ச்சி கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் உள்ளனர்.

    2 ஆயிரம் ஆண்டுபழமையான பாறை ஓவியங்கள்

    • கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அகழாய்வு குறித்து மாதிரி நிகழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்து றையுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது.

    இந்த கோடைகால முகாமில் குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம் மற்றும் மாதிரி அகழ்வாராயச்சி, தொழில்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு மற்றும் பல வகையான செயல்பாடுகள் வழங்கப்படும்.

    இந்த முகாம் நேற்று தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாமின் முதல் நாளான நேற்று கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறுக்கி கிராமத்தில் காலபைவரவர் மலையில் உள்ள இருளன் கவியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்ததார்.

    இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அகழாய்வு குறித்து மாதிரி நிகழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயணத்தின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரகுமார், தனி தாசில்தார் விஜயகுமார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

    நாளை (15ம் தேதி) கொய்மலர்கள் சாகுபடி மையம், டான்புளோரா மலர் உற்பத்தி மையம், 17ம் தேதி ஓசூரில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை பார்வையிட டைட்டான் நிறுவனம், அசோக் லைலேண்ட் நிறுவனம், 18ம் தேதி அரசு மருதுவக் கல்லூரி மருத்துவமனை, 19ம் தேதி ஊட்டச்சத்து இளம் ஆய்வு தலைப்பில் பெங்களூர் விஸ்வராய அருங்காட்சியகம், குப்பம் இண்டர்நேஷ்னல் பவுண்டேசன், 22ம் தேதி மத்திகிரி கால்நடை பண்ணை மறறும் ஓசூர் மாநகராட்சியும், 24ம் தேதி அய்யூரில் வனத்துறையிடனருடான கலந்துரையாடல் கூட்டம், 26ம் தேதியன்று கிருஷ்ணகிரி அணை பூங்காவில் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் இரண்டு குழுக்களாக மொத்தம் 660 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட உள்ளனர்.

    Next Story
    ×