என் மலர்
கிருஷ்ணகிரி
- சிறு பாலம் அமைக்க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாந்துறை அணையில் இருந்து பெனுகொண்டாபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே செட்டியப்பன் நகர் பகுதிக்கு செல்ல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறு பாலம் அமைக்க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியரே ஜான், ஒன்றிய துணை செயலாளர் இந்தியாஸ் ஷாஜஹான், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சரளா ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வனஜாமணி, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் முனுசாமி, பாசறை செயலாளர் பாண்டியன். மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
- அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தம்பட்டி கிராமம் அருகே உள்ள கவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 43). இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் மன விரக்தியில் இருந்தார்.
இதனால் பேபி கடந்த 7-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு பேபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் தளி அருகே உள்ள பசுவனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (23). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை.
சம்பவத்தன்று மனவி ரக்தியில் இருந்த சசிக்குமார் விஷம் குடித்தார்.இவரது உறவினர்கள் இவரை மீட்டு பெங்களளூரு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- காலியிடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல் பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) பொது கலந்தாய்வு நடக்கிறது. பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., – வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம் பி.லிட், தமிழ், ஆங்கிலம் ஆகிய அனைத்து கலைப் பாடப்பிரிவுகளுக்கும் வருகிற ஜூன், 19-ந் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதில், ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வின் போது இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ் எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்) சாதிச் சான்றிதழ் (அசல்) வருமானச் சான்றிதழ், 4 மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவை எடுத்து வரவேண்டும். கலைப்பிரிவுக்கு, 2,100 ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,120 ரூபாய், கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,220 ரூபாய் சேர்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும். காலியிடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புவியரசனை இரும்பு கம்பி மற்றும் கைகளால் அடித்து தாக்கியுள்ளனர்.
- போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஒட்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவியரசன் (வயது 32). இவர் இவரது உறவினர் பெண்ணிடம் வீட்டின் அருகே நின்று கொண்டு பேசிகொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (40), வெடிகோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி (20), பேருஅள்ளியை சேர்ந்த இளங்குமரன் (29) ஆகிய மூன்று பேரும் புவியரசனை இரும்பு கம்பி மற்றும் கைகளால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து புவியரசன் காவேரிபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம், திருப்பதி, இளங்குமரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மோதியது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தின்னூர் எக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரம் (வயது35). கூலி தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் இவரது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மோதியது. இதில்பலத்த காயமடைந்த சவுந்திரம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓசூர் அருகே உள்ள ஆவலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (40). கூலி தொழிலாளி.இவர் பெங்களுர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோபியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் கோபி மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
- உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு, தளி உள்ளிட்ட பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளன.
இந்த வனப்பகுதிகளில் மான், குரங்கு, முயல், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
கோடைக் காலங்களில் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும் விலங்குகள் மின்வேலிகளில் சிக்கியும், வனப்பகுதியில் உள்ள விஷக்காய்களை சா ப்பிட்டும் உயிரிழக்கின்றன.
இந்நிலையில், ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள சானமாவு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குரங்குகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி, சாலைகளில் சுற்றி வருகின்றன.
மேலும், சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் குரங்கை வேடிக்கை பார்ப்பதோடு, தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களைக் குரங்குகளின் பசியைப் போக்க வழங்கி வருகின்றனர்.
இந்த உணவுகளை எடுக்கக் குரங்குகள் போட்டிப் போட்டு சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறிய தாவது:-
குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் இருப்பிடத்துக்கு ஏற்கெனவே நாம் ஆபத்தை உருவாக்கி விட்டோம். தற்போது, சாலைகளில் சுற்றும் குரங்குகளுக்கு உணவுகளை வழங்கி அவற்றுக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறோம்.
சானமாவு வனப்பகுதி சாலையோரங்களில் வீசப்படும் உணவுகளை எடுக்க சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
மேலும், தனது உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இதைத் தடுக்க சாலையோரங்களில் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவுகளை வீசிச் செல்ல வேண்டாம் என வனத்துறை மூலம் எச்சரிக்கை செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 65 மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு பயில தகுதி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்களில் பயன்ற மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 65 மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு பயில தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ் செல்வன் என்கிற மாணவன் 720-க்கு 660 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முறையே அபியுக்தன் 720-க்கு 558 மதிப்பெண் களும் பெற்று இரண்டாம் இடமும், கமலேஷ் 720-க்கு 564 மதிப்பெண்களும் பெற்று மூன்றாம் இடமும் ரகுநாத் 541 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி பணப்பரிசு மற்றும் கேடயம் வழங்கி பேசுகையில் எதிர்காலத்தில் மருத்துவ படிப்பு முடித்து ஏழை மக்கள், ஊனமுற்றோர் மற்றும் சமுதாயத்திற்கு சிறப்பான சேவை செய்திடவேண்டும் என அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இப்பள்ளியில் பயின்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெவ்வேறு மருத்துவ மனைகளில் பல்வேறுபட்ட பிரிவுகளில் சிறப்பான சேவை செய்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்ற னர் என்பதனையும் நினைவு கூர்ந்தார்.
முடிவில் பாரத் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் மற்றும் மருத்துவர் சந்தோஷ் பாராட்டினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் மற்றும் பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஹரிநாத் செய்திருந்தனர்.
- மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டன.
- 12 பேர் இருசக்கர, 3 சக்கர வண்டிகள் கேட்டும் என மொத்தம் 48 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் கோரிக்கை மனுக்களை கொடுதுதனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் 30 பேர் உதவி தொகை கேட்டும், 6 பேர் இலவச வீட்டு மனை கேட்டும், 12 பேர் இருசக்கர, 3 சக்கர வண்டிகள் கேட்டும் என மொத்தம் 48 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் தாசில்தார்கள் சம்பத், விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.
- அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஜெட்டாய் மோச்சி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
உத்தரபிரதேசம் மாநிலம் நரசிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்லால் (வயது58). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அங்கேயே தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 8-ந் தேதி சுந்தர்லால் காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டப்பட்டியில் ஒரு தனியார் பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து சுந்தர் லால் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பம் குறித்து இறந்தவரின் நண்பர் கிரஷத்தி என்பவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் மோரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெட்டாய் மோச்சி (65). கூலித்தொழிலாளியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து ஜெட்டாய் மோச்சி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஜெட்டாய் மோச்சி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள்.
- அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக ள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்திட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சரயுவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகளில் கழிப்பறை வசதிகளும், தண்ணீர் வசதிகளும் இல்லை. இதனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள்.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக ள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்திட வேண்டும். மேலும் அதிக மாணவ, மாணவிகள் உள்ள பள்ளிகளில் கூடுதல் கழிப்பிட கட்டிடங்கள் கட்டிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீதி ரூ.4ஆயிரம் பணத்தை திருப்பிதராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
- ரத்னாகரும், அவரது நண்பர் லோகேஷ் என்கிற ஸ்ரீகாந்த் ஆகிய 2பேரும் சேர்ந்து சங்கரை ஆபாசமாக திட்டி கல்லால் சரமாரியாக தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எருதாளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்னாகர் (38), அவரது நண்பர் லோகேஷ் என்கிற ஸ்ரீகாந்த்.
இதில் ரத்னாகர், ஒரு வருடத்திற்கு முன்பு சங்கரிடம் ரூ.10 ஆயிரம் கடனாக கேட்டு இருந்தார். அவர் ஓசூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பெற்று ரத்னாகருக்கு கடனாக கொடுத்தார். அந்த பணத்தில் இருந்து ரத்னாகர் ரூ.6 ஆயிரத்தை சங்கருக்கு திருப்பி கொடுத்து விட்டதாக தெரிகிறது. மீதி ரூ.4ஆயிரம் பணத்தை திருப்பிதராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து சங்கர், கடந்த 10-ந் தேதி ரத்னாகரிடம் சென்று மீதி பணத்தை தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ரத்னாகரும், அவரது நண்பர் லோகேஷ் என்கிற ஸ்ரீகாந்த் ஆகிய 2பேரும் சேர்ந்து சங்கரை ஆபாசமாக திட்டி கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த சங்கர் உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சங்கரை கல்லால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரத்னாகரை கைது செய்தனர்.
- ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.
- டிப்ளமோ, கல்லூரி படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.
அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கல்லூரி படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






