என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வில் மாணவர்கள் சாதனை"

    • பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 65 மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு பயில தகுதி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்களில் பயன்ற மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 65 மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு பயில தகுதி பெற்றுள்ளனர்.

    தமிழ் செல்வன் என்கிற மாணவன் 720-க்கு 660 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    முறையே அபியுக்தன் 720-க்கு 558 மதிப்பெண் களும் பெற்று இரண்டாம் இடமும், கமலேஷ் 720-க்கு 564 மதிப்பெண்களும் பெற்று மூன்றாம் இடமும் ரகுநாத் 541 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி பணப்பரிசு மற்றும் கேடயம் வழங்கி பேசுகையில் எதிர்காலத்தில் மருத்துவ படிப்பு முடித்து ஏழை மக்கள், ஊனமுற்றோர் மற்றும் சமுதாயத்திற்கு சிறப்பான சேவை செய்திடவேண்டும் என அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.

    மேலும் இப்பள்ளியில் பயின்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெவ்வேறு மருத்துவ மனைகளில் பல்வேறுபட்ட பிரிவுகளில் சிறப்பான சேவை செய்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்ற னர் என்பதனையும் நினைவு கூர்ந்தார்.

    முடிவில் பாரத் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் மற்றும் மருத்துவர் சந்தோஷ் பாராட்டினர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் மற்றும் பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஹரிநாத் செய்திருந்தனர்.

    ×