என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
- மீதி ரூ.4ஆயிரம் பணத்தை திருப்பிதராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
- ரத்னாகரும், அவரது நண்பர் லோகேஷ் என்கிற ஸ்ரீகாந்த் ஆகிய 2பேரும் சேர்ந்து சங்கரை ஆபாசமாக திட்டி கல்லால் சரமாரியாக தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எருதாளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்னாகர் (38), அவரது நண்பர் லோகேஷ் என்கிற ஸ்ரீகாந்த்.
இதில் ரத்னாகர், ஒரு வருடத்திற்கு முன்பு சங்கரிடம் ரூ.10 ஆயிரம் கடனாக கேட்டு இருந்தார். அவர் ஓசூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பெற்று ரத்னாகருக்கு கடனாக கொடுத்தார். அந்த பணத்தில் இருந்து ரத்னாகர் ரூ.6 ஆயிரத்தை சங்கருக்கு திருப்பி கொடுத்து விட்டதாக தெரிகிறது. மீதி ரூ.4ஆயிரம் பணத்தை திருப்பிதராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து சங்கர், கடந்த 10-ந் தேதி ரத்னாகரிடம் சென்று மீதி பணத்தை தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ரத்னாகரும், அவரது நண்பர் லோகேஷ் என்கிற ஸ்ரீகாந்த் ஆகிய 2பேரும் சேர்ந்து சங்கரை ஆபாசமாக திட்டி கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த சங்கர் உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சங்கரை கல்லால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரத்னாகரை கைது செய்தனர்.






