என் மலர்
கிருஷ்ணகிரி
- எதிரே வந்த லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது.
- தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது23). இவர் கோனோரிபள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று பேகேப்பள்ளி-உத்தனப்பள்ளி சாலை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து க்குள்ளானது.
- படுகாய மடைந்த தீபன் ரத்த வெள்ளத்தில் சம் பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தீபன் (வயது27). இவர் அதே பகுதியில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபன் தனது மோட்டார் சைக்கிள் ஊத்தங்கரை-கிருஷ்ணகிரி சாலையில் ஜண்டமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில படுகாயமடைந்த தீபன் ரத்த வெள்ளத்தில் சம் பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
- அந்த மாட்டை சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார் .
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் மேடுகாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (வயது23). விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் தனது மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
அந்த மாட்டை சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார் . இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அந்த மர்ம நபர் கீழ்பூங்குறுத்தி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (24) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
- குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
- இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம், தளி ஒன்றியங்களில் நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம், ஓசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, கெலமங்கலம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள் மற்றும் தளி ஒன்றியத்தில் 22 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கெலமங்கலம் ஒன்றியம் ஜக்கேரி அருகில் ராயக்கோட்டை - அத்திப்பள்ளி மாநில சாலை எண்.85 சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 9.5.2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
- படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனபள்ளி பக்கமுள்ள கொம்மே பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ரெட்டி (42) என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 9.5.2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது நரசிம்மனை பீர்பாட்டிலால் சுரேஷ்ரெட்டி தாக்கினார். இதில் படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, சுரேஷ் ரெட்டிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள், ஒய்வு பெற்றப்பின்பு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
- நிலுவையின்றி ஓய்வு பெற்ற துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்பரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள், ஒய்வு பெற்றப்பின்பு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ரூ.50 ஆயிரம் பணிக்கொடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஓய்வூதியம் கிடைக்காமல் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, நிலுவையின்றி ஓய்வு பெற்ற துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பணம் வைத்து சூதாடிய அப்புகொட்டாய் சிவராஜ் (வயது 41), பரமசிவம் (42) தமிழ்செல்வம் (30) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது நாகரசம்பட்டி, பாகலூர், ராயக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அப்புகொட்டாய் சிவராஜ் (வயது 41), பரமசிவம் (42) தமிழ்செல்வம் (30) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள், குப்பை அள்ளும் பிக்அப் வாகனங்கள் நகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் பணியாளர்களுக்கு மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார் நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 12 குப்பை அள்ளும் வாகனங்களை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15-வது மானிய குழு நிதியில் ரூ.88 லட்சம் ஒதுக்கப்பட்டு, 12 குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள், குப்பை அள்ளும் பிக்அப் வாகனங்கள் நகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் பணியாளர்களுக்கு மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.
இதில் நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாயி அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், அன்பரசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறியதாக மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசு மற்றும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமிபிரியா தேவராஜன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜயஸ்ரீ வரவேற்றார்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி. மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசுமூர்த்தி, புஷ்பா சர்வேஷ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்ளிட்டோர் பேசினார்கள்.
இதில் மாவட்ட அவைத்தலைவர்கள் தட்ரஅள்ளி நாகராஜ், யுவராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஓசூர் மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சின்னசாமி, மாவட்ட பொருளாளர்கள் கதிரவன்,சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அணிகளின், அமைப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் புஷ்பா, சாலம்மா ஆகியோர் நன்றி கூறினார்கள்.
- ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பறிக்கின்ற அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
- மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் இருந்து தாலுகா அலுவலகம் வரை மழையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சந்திரன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு கூட்டுறவு தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பூபதி, பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் தினேஷ், நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பைரப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் நடராஜன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பறிக்கின்ற அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள்.
- சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்தார்.
- வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த குந்தியால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சத்யா (வயது23), என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்தார். இதன்காரணமாக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் எந்த பலனும் அளிக்காததால் மனவேதனை அடைந்த சத்யா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3வருடங்கள் ஆனநிலையில் சத்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் சரவணன் மற்றும் அவரது உறவினர்களிடம் பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.
- மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.வி.டி.பி. கோசலை விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 552 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களும், 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரத்து 913 மதிப்பிலான லெனோவா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டது.
மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஏனைய மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.
மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் தமிழ் சங்க செயலாளர் கோபால நாராயண மூர்த்தி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் பேசுகையில் மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் மென்மேலும் உயர ஊக்கமளித்து வாழ்த்துக்களை கூறி பேசினார்கள்.
மேலும் தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர்கள், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர், வேலூர் அக்சிலியம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் யூஜினி, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வா ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ரூ.36.95 கோடியில் கல்வி பணி
இதுவரை ஐ.வி.டி.பி. கோசலை விருது திட்டத்திற்காக மட்டும் ரூ.4.69 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், கல்வி பணிக்காக மட்டும் ரூ.36 கோடியே 95 லட்சம் ஐ.வி.டி.பி. நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.வி.டி.பி. தலைவர் குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.






