என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பறிக்கின்ற அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
- மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் இருந்து தாலுகா அலுவலகம் வரை மழையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சந்திரன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு கூட்டுறவு தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பூபதி, பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் தினேஷ், நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பைரப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் நடராஜன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பறிக்கின்ற அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள்.






