லாரி மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

எதிரே வந்த லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது.தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது23). இவர் கோனோரிபள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று பேகேப்பள்ளி-உத்தனப்பள்ளி சாலை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com