என் மலர்tooltip icon

    கரூர்

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பூங்கோடை வாய்க்கால் மேட்டு பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்கானிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நொய்யல் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (வயது48) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல் மூலிமங்கலம் பிரிவு பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி(34) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்குளித்த கூலி தொழிலாளி பலியானார்.
    • மது போதையில் நடந்த சம்பவம்

    கரூர்:

    கரூர் பொரிக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது49). கூலித் தொழிலாளி. இவர் இதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள கண்ணன் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம்தேதி வீட்டுக்குள் சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாடகை வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவ புரீஸ்வரர், மேட்டுமருதூார் ஆரா அமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பெரியபாலம் நதி ஈஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகை மலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சென்ட்ரிங் வேலை செய்த போது பரிதாபம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர்,

    குளித்தலை அருகே சென்ட்ரிங் வேலை செய்த போது மிஷினில் கை அறுப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி மருத்துவமனையில் பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா முத்தகபுடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிங்காரம் (வயது 61). இதுவரை திருமணமாகாத இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அன்று சின்னபனையூரில் வீரம் மாள் என்பவரின் தொகுப்பு வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மிஷினில் அறுக்கும் போது எதிர்பாராத விதமாக இடது கட்டை விரல் மற்றும் இடது கால் சுண்டு விரலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிங்காரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் அவரின் சகோதரர் மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குருணை மருந்தை சாப்பிட்டவர் பலி
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர்,இனுங்கூரில் மனைவி இறந்த துக்கத் தில் குருணை மருந்து சாப்பிட்டவர் பலியானார்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தர்மலிங்கம் (வயது 65). இவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனதால், மனநலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த தர்மலிங்கம் கடந்த 28ம் தேதி அன்று யாரும் இல்லாத நேரத்தில் குருணை மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை அழைத்துக்கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரின் மகன் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோவில் இருந்த மொபைல் போனை திருடியவர்கள்
    • கரூர் டவுன் போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    கரூர் அருகே, ஆட்டோ டிரைவரிடம், மொபைல் போன் திருடியதாக, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கரூர், எல்.என்.எஸ்., சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 47) ஆட்டோ டிரைவர். இவர், திருகாம்புலியூரில் உள்ள ஸ்டாண்டில், ஆட்டோவை நிறுத்தி விட்டு அருகில் உள்ள, டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவில் இருந்த மொபைல் போனை, இரண்டு வாலிபர்கள் திருடி கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப் பினர். முரளி கொடுத்த புகார்படி, மொபைல் போனை திருடியதாக தஞ்சாவூரை சேர்ந்த பாலமுருகன் (22), வினோத் (21) ஆகியோரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மாயம்
    • போலீசில் தந்தை புகார்

    கரூர்,

    தரகம்பட்டி அடுத்த, இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மை நாயக்கர் (வயது 54). கூலித் தொழிலாளி. இவரது, 19 வயது மகள் அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றவர், மாலை நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகார்படி, சிந் தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.

    • கிராமம் தோறும் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு
    • பசுமை நிறைந்த கிராமங்கள் உருவாக்க நோக்கம்

    'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிரா மம்தோறும் துவங்கியுள்ளது என, கரூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தும் விதமாக, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு இயக்கம் கடந்த, 1ல் துவங்கியது. வரும் 15ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் மூலம் பொது இடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் மாஸ் கிளீனிங் செய்தல், பள்ளி கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் தனிநபர் இல்லங்களில் சுகாதாரம் பேணுவது தொடர்பாக, சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்ப டுத்துவதை ஊக்குவிக்கும் நட வடிக்கை, கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், என் குப்பை என் பொறுப்பு, என் கிராமம் தூய்மை கிராமம் என, உறு திமொழி எடுத்துக் கொண்டு செயல்படுவது. சுகாதாரமான பசுமை நிறைந்த கிராமங்களை உருவாக்குதல் போன்ற நடவு டிக்கைகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணம் பறித்த வாலிபர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பூமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் கரூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுந்தரம் (24) என்பவர், ரவியின் சட்டைப்பையில் இருந்த பணத்தை திருடி உள்ளார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    • கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி, பாலப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது. மேலும் கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மாவட்ட திட்டமிடும் குழு தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடபடவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்
    • இந்த பட்டியல், இன்று அந்தந்த அலுவலகங்களில் பொதுவான தகவலுக்காக வெளியிடப்படவுள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் படி, கரூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு இன்றைய நிலையில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் கொண்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், இன்று (2) அந்தந்த அலுவலகங்களில் பொதுவான தகவலுக்காக வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை போனது
    • இது குறித்து கரூர் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் முத்தரசு (வயது 43). இவர் குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 29-ம் தேதி் வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பால் கனி வழியாக கதவின் பூட்டை உடைந்து மர்ம நபர்கள் நுழைந்து வீட்டிலிருந்த தங்க மோதிரம், செயின், நாணயம், தோடு உட்பட 12 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து கரூர் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×