என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த முத்து வைரவன் மகன் லட்சுமணன்
    • க்கம்பக்கத்தினர் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    நாகர்கோவில் : ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த முத்து வைரவன் மகன் லட்சுமணன் (வயது 26), காற்றாலையில் டவர் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் குமாரபுரம் 4 வழி சாலை தேவசகாயம் மவுண்ட் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

    பூதப்பாண்டி நாவல் காட்டைச் சேர்ந்த ராசையா மகன் மகேந்திரன் (27). இவர் மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழிக்கு வரும்போது அவ்வையார் அம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துக்கள் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது.
    • வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது


    நாகர்கோவில் : கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் மரியசிசு குமார் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் குறும்பனை முதல் ராமன் துறை வரையிலான பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது. அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பூத் முகவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பது என்றும், வரும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜீன், பெதலிஸ், லயோலியன், ஜோசப் பாத், சீலன், லீலா, ஆண்டனி, பெர்சிலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கொட்டாரம் ராமச்சந்திரா நகர் நேதாஜி இளந்தளிர் நற்பணி மன்றம் சார்பில்
    • 18-வது ஆண்டு தீபாவளி விழா 2 நாட்கள் நடைபெற்றது


    நாகர்கோவில் : கொட்டாரம் ராமச்சந்திரா நகர் நேதாஜி இளந்தளிர் நற்பணி மன்றம் சார்பில் 18-வது ஆண்டு தீபாவளி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் மாபெரும் கபடி போட்டி, உறி அடித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் 2-வது நாள் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
    • தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    நாகர்கோவில் : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மார்த்தாண்டம் வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ.வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சிபித்தாஸ் தலைமை தாங்கினார். தொண்டர் அணி அமைப்பாளர் விஜயராணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் வினுக்குமார் கலந்துகொண்டனர். முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


    • மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது.
    • இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.


    நாகர்கோவில் : குருந்தன்கோடு அருகே உள்ள செருப்பங்கோடு என்ற இடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க ஆட்சியரின் ஒப்புதல் பெற உள்ளதாக தனியார் நில உரிமையாளர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் டவர் அமைக்க வி.ஏ.ஓ., தாசில்தார், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஒப்புதல் வழங்கக்கூடாது என கோரி அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர். செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி
    • இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்

    நாகர்கோவில் : வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி. இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. எனினும் சரியாக அதிலிருந்து குணமாகாத தால் மனம் உடைந்த அற்புதராஜ், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள பூவரசு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக வெள்ளிச்சந்தை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இவருக்கு கோமளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதில் ஒரு மக னுக்கு திருமணம் ஆகி விட்டது. சம்பவம் குறித்து கோமளா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச் சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜின் உடலை கைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்க டாஜலபதி கோவிலில்
    • தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடந்தது

    நாகர்கோவில் : கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாஜலபதி கோவிலில், தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைதெ் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூலங்கி சேவை நடந்தது.அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை யும், அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடு களை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜல பதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது புகார்
    • கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. நாகர்கோவில் சப்-டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சேர்க்கப்பட்டுள்ள னர். தீபாவளியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடந்த விபத்துகளில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வடசேரி, நேசமணி நகர், கோட்டார், ஆசாரிப்பள்ளம் பகுதியில் தீபாவளி பண்டிகையை யொட்டி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். தகராறில் ஈடுபட்டு காயமடைந்தவர்களில் ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் உள்ளனர். இதேபோல் கன்னியா குமரி சப்-டிவிசனலுக் குட்பட்ட பகுதியிலும் குடி போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குளச்சல், தக்கலை பகுதியிலும் குடி போதையில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது.
    • கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 51), கூலி தொழிலாளி. இவர் வடிவீஸ்வரம் பகுதியில் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பங்கேற்பு
    • பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் சாங்கையில் அமைந்துள்ள பால்மா மக்கள் அமைப்புகளின் 19-வது ஆண்டு தொடக்க விழா பால்மா அரங்கத்தில் நடைபெற்றது. அன்பையன் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். பால்மா இசைக் குழுவினர் இறைவணக்கம் பாடினார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள். இயக்குனர் செல்லன் வரவேற்று பேசினார். பால்மா இயக்குனர் ஜோதி விமலாபாய் அறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான நடனம் நடைபெற்றது.

    பின்னர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் விஜிலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், காட்டத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பால்மா கூட்டமைப்பின் தலைவர் ஐடா குளோரி பாய் சிறப்பு பாடல் பாடினார். பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பேசியதாவது:-

    பால்மா அமைப்பு என்பது பெண்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பாகும். மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் இருக்கும் மனித வளத்தை மிக சிறப்பாக வெளிக்கொண்டு வந்த பெருமை இந்த அமைப்பின் நெறிமுறையாளர் அன்பையன் அவர்களையே சாரும். இன்றைக்கு இந்த அரங்கம் நிறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் 41 ஆண்டு காலம் நீங்கள் விதைத்த விதைதான்.

    இந்த பால்மா அமைப்பானது 451 சுய உதவி குழுக்கள் மற்றும் பனை தொழிலாளர் பேரவை என்ற பெயரில் 102 மன்றங்களை உருவாக்கி மாவட்டத்தின் அடையாளமாய் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு தொடர் உதவி தொகைகள், முதியோர் ஓய்வு உதவி திட்டம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மகளிர் திருமண வைப்பு நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த பிற மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒடியல் கூழ் இலங்கையில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் பனை மரப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவையான உணவு பொருளாகும். இந்த உணவு பொருள் தமிழ்நாட்டில் அதுவும் முதலில் குமரி மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பால்மா கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோரி பாய் நன்றி கூறினார்.

    • இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார்
    • ன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதனையொட்டி மாநாடு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இளைஞர் அணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி மாநாடு விளக்க இரு சக்கர வாகன பேரணியை நாளை மறுநாள் (15-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.

    கன்னியாகுமரியில் அதற்கான முன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணியை தொடங்கி வைக்க உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 14-ந்தேதி இரவு கன்னியாகுமரி வந்து சேருகிறார். மறுநாள் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் சிறிது தூரம் அவரும் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பேரணியில் 200 பைக்குகள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள சட்டமன்ற ெதாகுதிகளில் 50 பைக்குகளில் சென்று மாநாடு விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்குவர். பின்னர் நவம்பர் 27-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளன்று பைக் பேரணி சென்னை சென்றடையும்.

    • இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.
    • மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை சேர்ந்த 60 வயதான பெண் ணுக்கு சூலகப் புற்றுநோய் (ஒவேரியன் கேன்சர்) இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில், திருவனந்த புரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

    வழக்கமான கீமோதெரபி செயல்முறை பயனேது மின்றி தோல்வியடைந்திருந்த நிலையில் சூலக புற்று நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் மூதாட்டிக்கு இருந்தது. எனவே, அவருக்கு சிகிச்சை யளிக்க கிம்ஸ் ஹெல்த்தின் அறுவை சிகிச்சை புற்றுநோ யியல் துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் ஒருங்கி ணைப்பாளரான டாக்டர் ஜெயானந்த் சுனில் தலைமை யின் கீழ் மருத்துவர்கள் குழு, பி.ஐ.பி.ஏ.சி. (பிரஷ ரைஸ்டு இன்ட்ராபெரிட் டோனியல் ஏரோசோ லைஸ்டு கீமோதெரபி) மருத்துவ செயல்முறையை தேர்வு செய்தது.

    சுவாச சிரமம் இருக்கும் போது நுரையீரல்களுக்குள் எப்படி நேரடியாக மருந்துப் பொருளை இன்ஹேலர்கள் உட்செலுத்துகின்றனவோ அதே போன்ற செயல் முறையே இது. இந்த மருத் துவமுறை அதிக பயனளிக்கும் திறன் கொண்டதா கவும், கூடுதல் பாதுகாப்பானதாகவும் செயல்படுகிறது. அத்துடன், வழக்கமான கீமோதெரபி சிகிச்சை முறையில் நிகழும் பக்க விளைவுகளை விட, இதில் மிக குறைவான பக்க விளைவுகளே ஏற்படக்கூடும் என்பது இதன் சிறப்பாகும்.

    மேலும் வயிறு, கருப்பை, பெருங்குடல் மற்றும் சூலக உறுப்புகளில் உருவாகியிருக்கும் முதிர்ச்சியடைந்த புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மிகச்சிறிய துளை வழியாக அழுத்தப்பட்டிருக்கும் ஏரோசால் (மருந்தை உள்ள டக்கிய கூழ்மம்) வடிவில் கீமோதெரபியை இந்த மருத்துவ முறை வழங்கு கிறது. இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.

    இந்த புதுமையான மருத் துவ செயல்முறை வெற்றியடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பிறகு சிஸ்டமிக் கீமோ தெரபியோடு சேர்த்து மருத்துவ செயல்முறையின் அதிக அமர்வுகளில் பங்கேற்குமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    புத்தாக்கமான பி.ஐ.பி. ஏ.சி. மருத்துவ செயல் முறையை மேற்கொள்வ தற்கு அங்கீகாரம் அளிக்கப் பட்ட மற்றும் இதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற ஒரே மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயானந்த் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள ஐ.எஸ்.எஸ்.பி.பி. மருத்துவமனையில் இந்த செயல் முறைக்கான நிபுணத்துவ பயிற்சியையும் டாக்டர் ஜெயானந்த் பெற்றிருக்கிறார்.

    ×