என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
- நவீன்குமார் MC அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து இன்று நாகர்கோவில் வடசேரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு வைத்து நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் MC அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
ஆகையால் காங்கிரஸ் பேரியக்க மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் வார்டு தலைவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
Next Story






