என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
    • பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோச கர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் உள்ள 7 அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவம் நடப்பதற்கு முன்பு கோவிலில் ஆழ்வார் திரு மஞ்சனம் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. இந்த 2 மணி நேரம் பக்தர்கள் கோவி லுக்குள் தரிச னத்துக்கு செல்ல அனும திக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

    • குழந்தை திருமணம் செய்து மீட்கப்பட்டவர்
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். பெற்றோர் விருப்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் நடைபெற்றதாக கூறி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி விசாரணை மேற்கொண்டார். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து கொடுத்த தால் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் சிறுமியின் தாயார், வாலிபரின் தந்தை ஆகியோர் மீது கன்னியாகுமரி மகளிர் போலீசில் சமூகநலத்துறை அதிகாரி புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி இருளப்ப புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்லன் குமாரன் விளையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி மாலையில் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    • பயணிகள் வலியுறுத்தல்
    • புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில், நவ.18-

    நெல்லையில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக 5 ஆண்டு கள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதல் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப் பட்டது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இரணியல் ரெயில் நிலை யத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் ரெயில் நிலையமும், மறு மார்க்கம் 15 கி.மீ. தொலைவில் குழித்துறை ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.

    இந்த காலகட்டங்களில் குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் இந்த நிறுத்தம் ரெயில்வே அதிகாரிகளால் அனு மதிக்கப்படவில்லை. திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் அறிவித்து இயக்கும் போது இந்த ரெயில் இயங்கும் 456 கி.மீ. தூரத்தில் திருச்சி முதல் மதுரை வரை உள்ள 156 கி.மீ. மட்டுமே எந்த வித கிராசிங் இல்லாமல் இயங்கும் இருவழிப்பாதை யாக இருந்து வந்தது. மீதமுள்ள மதுரை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள 300 கி.மீ. தூரம் ஒரு வழிபாதையாக இருந்த காரணத்தால் கிரா சிங்குக்காக வேண்டி அதிக அளவில் இந்த ரெயில் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நிறுத்தம் அனுமதி கொடுத்தால் இந்த ரெயில் சூப்பர் பாஸ்ட் என்ற அந்தஸ்தை இழந்து விடும் என்ற காரணத்துக்காக ரெயில்வே துறை மறுத்து வந்தது.

    தற்போது நிலமை மாற்றம் பெற்று மதுரை முதல் நாகர்கோவில் வரை இருவழிபாதை பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி கள் இந்த 2 மாதத்திற்குள் முடிவு பெற்றுவிடும். மீத முள்ள பணிகளும் முடிவு பெற்றுவிட்டால் திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வரும் வரை மறுமார்க்கமாக வரும் எந்த ஒரு ரெயிலுக்கும் கிராசிங் வேண்டி நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சேர்ந்த பயணி கள் கோரிக்கை விடுக்கின்ற னர். கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகையால் அடுத்த ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்க கூடாது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணி கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

    • போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ட்ராஜ் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றிய இவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் டிஸ்மிஸ் செய்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு, நகைபறிப்பு போன்ற வற்றில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக இவர் மீது தக்கலை, திருவட்டார், மார்த்தாண்டம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது இவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதனை சாலையில் விட்டுச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மார்த்தாண்டம் திக்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மெர்லின்ட்ராஜை கைது செய்தனர். வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மெர்லின்ட்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
    • 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நாகர்கோவில்:

    தேரூர் பகுதியை சேர்ந்த வர் ஆறுமுகம் வன ஊழியர். இவரது மனைவி யோ கேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சதாசிவம் சென்னை பகுதியில் தனது பெயரை மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதா சிவத்தை நாகர்கோவில் ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தேரூர் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரூர் இரட்டை கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    • பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை
    • மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.  சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளி பிரகா ரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ" வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகு துறையில் அய்யயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து இடங்களி லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. சிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல்படிப்பு படித்து வந்தார்.

    கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பயிற்சி மருத்துவ மாணவன் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி காரணம் என்று எழுதி வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ஹரிஷ், ப்ரீத்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமசிவம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் பரமசிவத்திற்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமின் பெற்ற இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினார்கள். தூத்துக்குடியில் உள்ள ஹரிஷ் வீட்டிற்கும் கும்பகோணத்தில் உள்ள ப்ரீத்தி வீட்டிற்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். ஹரிஷ் 2 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து விசாரணை நடத்தப்பட்டது.

    தற்கொலை செய்த சுகிர்தாவிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? எதற்காக அவர் உங்களது பெயரை எழுதி வைத்துள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் ப்ரீத்தி ஒரு நாள் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடமும் போலீசார் 3 மணி நேரம் விசாரித்தனர். இருவரும் கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகுமாறு அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

    • நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
    • கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம், 66 அடிநீளம், 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது
    • ராஜ கோபுரத்தின் உயரத்தை 120அடியில் இருந்து 150 அடியாஉயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலி ல் ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம், 66 அடிநீளம், 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதே போல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் தலைமை ஸ்தபதியும், மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர்கடந்த சில நாட்களுக்குமுன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் ராஜகோ புரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜ கோபுரத்தின் உயரத்தை 120அடியில் இருந்து 150 அடியாஉயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த ராஜ கோபுரத்தை9நிலை யில் இருந்து 11நிலையாக மாற்ற வும் பரிசீலனை செய்யப் பட்டுவருகிறது. இந்தராஜ கோபுரம்ரூ.15 கோடி முதல்ரூ.20கோடிமதிப் பீட்டில்அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான அளவீடுகளை மறு ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி இன்று காலை நடந்தது.

    தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற கட்டி டக்கலை நிபுணர் அக்சயா பால கிருஷ்ணன் தலைமை யிலான கட்டிடக்கலை வல்லுநர்கள் குழு இன்று காலை பகவதி அம்மன் கோவிலில் வடக்கு வாசல் மற்றும் கிழக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடங்களை பார்வையிட்டு ராஜகோபரத்துக்கான இறுதிக்கட்ட அளவீடு செய்து வரைபடத்துக்கான ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்ட னர்.

    இந்த ஆய்வின் போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், குமரி மாவட்ட திருக்கோ வில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், சர்வேயர் அய்யப்பன், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி அகில உலகமே மீனவர் நாளாக கொண்டாடி வருகிறது
    • இந்த ஆண்டு மீனவர் நாள் விழா கொண்டாட்ட மானது வருகிற 21-ந்தேதி மாலை 4.30 மணியளவில் இணையம் புத்தன்துறை மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

    நாகர்கோவில் : கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமத்தின் இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி அகில உலகமே மீனவர் நாளாக கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்புகளும், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சியும் இணைந்து மீனவ நாளை ஆண்டு தோறும் சிறப்பித்து வருகிறது.

    இந்த ஆண்டு மீனவர் நாள் விழா கொண்டாட்ட மானது வருகிற 21-ந்தேதி மாலை 4.30 மணியளவில் இணையம் புத்தன்துறை மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார். கனிமொழி எம்.பி., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திருமாவளவன் எம்.பி., விஜய் வசந்த் எம்.பி., ஜவஹிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கலெக்டர், குமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மீனவ தலைவர்கள் மற்றும் அனைத்து மீனவ மக்களும் கலந்துகொள்கின்றார்கள்.

    இந்த கூட்டத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொள்வார் கள். இந்த மாநாட்டில் மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மீனவர்களுக்கு தனி தொகுதி வரையறை செய்ய வேண்டும். மீன வர்களை வசிக்கும் பகுதியை தனி ஊராட்சி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

    உலக மீனவர் நாளை முன்னிட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு என தனித்தனி பிரிவாக பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள், குறும்படப்போட்டி நடத்தப்பட்டது. வாணி யக்குடி புனித ஜேம்ஸ் உயர்நிலைப்பள்ளியில் வைத்து 7 நபர்கள் கொண்ட கால்பந்து போட்டியும் நடக்கிறது. 20-ந்தேதி கொட்டில்பாடு, புனித அல்லேசியார் திருமண மண்டபத்தில் வைத்து கடல் மீன் சமையல் போட்டியும், 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து நீச்சல், படகு போட்டிகளும் நடைபெறு கிறது.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மீனவர் நாளை முன்னிட்டு நாளை (18-ந்தேதி), 19-ந்தேதி அம்மாண்டிவிளை, புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் வைத்து 2 நாள் 'திமில் சங்கம்' கருத்தரங்கு நடத்தப் பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அய்யா வைகுண்டர் நடந்து சென்ற பாதையை நினைவு கூறும் வகையில் சாமிதோப்பு அன்பு வனத்திலிருந்து
    • ய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை 22-ந் தேதி திருவனந்தபுரம் சிங்கார தோப்பு பதியில் நிறைவடைகிறது.

    நாகர்கோவில் : அய்யா வைகுண்டர் நடந்து சென்ற பாதையை நினைவு கூறும் வகையில் சாமிதோப்பு அன்பு வனத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய அய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை 22-ந் தேதி திருவனந்தபுரம் சிங்கார தோப்பு பதியில் நிறைவடைகிறது.

    இந்த மகா பாதயாத்தி ரையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதயாத்திரை சாமிதோப்பு முத்திரி கிணற்றிலிருந்து தொடங்கி சுசீந்திரம் வழியாக சென்று இன்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்குகின்றனர். இங்கிருந்து பாதயாத்திரை நாளை (18-ந்தேதி) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வில்லுக்குறி, பத்மநாபபுரம், தக்கலை, அழகிய மண்டபம், பரைக்கோடு வந்தடைகிறது. பின்பு 19-ந்தேதி மார்த் தாண்டம், கொடுங்குளம் வரை சென்று இரவு அங்கு தங்குகின்றனர். பின்னர் 20-ந்தேதி யாத்திரை புறப்பட்டு அமரவிளை சென்றடைகிறது. 21-ந்தேதி காலை மங்கலத்து கோணம் யாத்திரை புறப்பட்டு 22-ந்தேதி திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதியை சென்றடைகிறது. அங்கு பணிவிடைகள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு தர்மங்களுடன் நிறைவு விழா நடைபெறுகிறது.

    • கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
    • 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசியபோது கூறியதாவது:- பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகள், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும். பணிகளில் ஏதாவது தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-2023 ஆண்டில் 122 கிலோ மீட்டர் சாலைப்பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டது. அதில் 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 180 பணிகளுக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு 93 பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 93 சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×