என் மலர்
கன்னியாகுமரி
- பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார்
- முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு
திருவட்டார், நவ.19-
குமரி மாவட்டம் குலசே கரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவி சுகிர்தா தற்கொலை செய்துகொண் டார்.
இவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் பேராசிரியர் பரமசிவன் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பானது குலசே கரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாண வர்களின் போராட்டம் எதிரொலியாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட் டது.
இதில் டாக்டர் பரமசிவன் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 2 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி நேரடியாக விசாரித்தனர். இவர்களும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து விசாரித்தனர். கல்லூரி நிர்வாகத்தின ரிடமும் கிடுக்கிப்பிடி விசா ரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு சம்மந்தமாக இதுவரை சுமார் 70 பேரிடம் விசாரணை செய்துள்ளனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
- திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 33). திருநங்கையான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வீர புலி பகுதியில் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஐயப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
- கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை மேகம் சூழ்ந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரியாமல் இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
மழை பெய்து கொண்டிருந்தபோதும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். இதனால் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரியில் இன்று காலையில் திடீர் என்று மழை பெய்தது. இதனால் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மழை நின்று, கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது.
இங்கு சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- தக்கலை அருகே பொதுமக்கள் மடக்கினர்
- ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.
தக்கலை :
கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து இங்குள்ள நீர்நிலை கரைகள், சாலை யோரம் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டம் களியக்காவிளை, தக்கலை உள்ளிட்ட பகுதி களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து கழிவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் கண்காணிப் பையும் மீறி சில வாகனங்கள் குமரி மாவட்ட எல்லைப் பகுதிக்குள் வந்து கழிவுகளை கொட்டிச் செல்வது நடந்து வருகிறது. ஒரு சில இடங் களில் அந்த வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஓப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தக்கலை அருகே கோழிப்போர்விளை வழியாக நேற்று இரவு ஒரு டெம்போ வந்தது. அந்த டெம்போவில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் டெம்போவை பள்ளியாடி செல்லும் சாலையில் மடக்கி சிறை பிடித்தனர்.
பின்னர் டெம்போவை சோதனையிட்ட போது அதில் கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்கலை போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து, ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தது கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 27) என்பதும், அவர் கோவ ளத்தில் இருந்து உணவு கழிவுகளை கோழிப்போர் விளை பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இது சம்பந்தமாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
- கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கே.பி.ரோட்டில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தினமும் பால் கொள் முதல், பால் பாக்கெட் விற்பனை சரிவர நடை பெறுகிறதா என்றும், பால் உப பொருட்கள், பால் கோவா, தயிர், மோர், குல்பி, சாக்லேட் போன்றவை உரிய முறையில் தயாரிக்கப் படுகிறதா என ஒவ்வொரு பிரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். பால் கொள்முதல் அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
உடனடியாக பால் உற்பத்தி அதிகரிக்க கறவை மாடு கடன் பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை அடைய வேண்டும் என்று எடுத்து ரைத்தார். பால் பண்ணை யில் உள்கட்டமைப்புகளில் சில மாற்றங்கள் செய்திடவும் ஒவ்வொரு பிரிவிலும் பணிகள் ஒரே சீரான முறை யில் உரிய பால் பண்ணை யின் அமைப்பின்படி செயல் படுத்த அறிவுறுத்தினார்.
பால் உற்பத்தி அதிக ரிக்கவும், பால் கொள்முதல் செய்வதே உறுதிப்படுத்தி செயல்படுத்திடவும், பொது மக்களுக்கு பால் பாக்கெட் மற்றும் பால் உபப்பொ ருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பகுதியிலும் கிடைத்திட அறிவுறுத்தினார். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.
ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன், துணை பதிவாளர் சைமன் சார்லஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.
நாகர்கோவில் :
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை சட்டசபையில் அறிவித்தார். அதனடிப்ப டையில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட வுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக கண்டறி யப்படும் 3 வகையான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான கண்டறியும் பரிசோ தனைகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வனைத்து பரிசோ தனைகளும் வலியின்றி மிக விரைவில் மிக எளிதாக செய்துகொள்ளலாம்.
சுகாதாரத்துறை அலுவ லர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பயனா ளர்களை யும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு மையங்களாக செயல்பட்டு கொண்டி ருக்கும் அரசு துணை சுகா தார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்க உரிய ஏற்பாடு களை செய்துள்ளனர்.
முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இப்பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மாவட்டத்தின் அனைத்து பயனாளர்களையும் 3 வருடத்திற்குள் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கிய பின் சுகாதாரத்துறை பணியாளர்கள் உங்கள் இல்லங்கள் தேடி வந்து இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கு வார்கள். இந்த அழைப்பி தழ்களில் அருகாமை யிலுள்ள பரிசோதனை முகாம்கள் பயனாளர்க ளுக்கு தெரியப்படுத்தப்ப டும். இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் பெறப்பட்டவுடன் பரிசோ தனை முகாமிற்கு சென்று பரிசோதனைகள் செய்திட மாவட்ட நிர்வாகத்தின சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பரிசோதனைகள் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனை களிலும் உரிய பயிற்சிகள் பெறப்பட்டவர்களால் செய்யப்படும். பரிசோதனை யின் முடிவில் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை யெனில், 3 வருடத்திற்குப்பின் மறுபரிசோதனை செய்துக் கொள்ளலாம்.
பரிசோதனையில் புற்று நோய் அறிகுறிகள் தென் பட்டால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேற்பரிசோதனைகள் செய்யும் வசதியுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.
வளர்ந்த நாடு என்ற பட்டத்திற்கு நாம் தயாராகும் நிலையில், தொற்றா நோய் களான சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. பிற தொற்றா நோய்களை போல் ஆரம்ப நிலையில் கண்டறிதலே புற்றுநோயினை குணப்ப டுத்த சிறந்த வழிமுறை. இதன்மூலம் புற்றுநோயி னால் வரும் உயிரிழப்புகளை வெகுவாக குறைக்கலாம்.
தமிழக அரசின் மக்க ளைத்தேடி மருத்துவம், உலக அளவில் தொற்றா நோய்களுக்கு ஒரு முன்மா திரியான திட்டமாக செயல்பட்டு கொண்டி ருக்கின்றது. இத்திட்டத்தின் வெற்றி மக்களாகிய உங்க ளின் ஈடுபாட்டை சார்ந் துள்ளது. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசின் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திடு மாறு கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- நேரில் ஆய்வு செய்தபின் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி
- இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது.
விஜய்வசந்த் எம்.பி. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
கடுமையான முயற்சி களின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட் டுள்ளது.
இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற் கொள்ள வேண்டியதுள்ளது.தற்பொழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படு கிறது. இந்த பணிகளை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். இந்த பணிக்கான திட்ட இயக்கு னர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்கா ரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்த பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட விஜய்வசந்த் எம்.பி. இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்ப தற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு உள்ள நடைமுறை சிர மங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்ப டும் என துறை அதிகாரி களுக்கு உறுதி அளித்தார்.
- நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
- அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
நாகர்கோவில் : நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் அவரை பரிசோத னைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கரு வுற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாணவியின் பெற்றோ ரிடம் தெரிவித்தனர். மகள் 8 மாதம் கர்ப்ப மாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை கேட்டு அவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று பெற்றோர் விசாரித்த போது, மாணவி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமை யில் உல்லாசமாக இருந்த தாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலீ சில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் சம்பந்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர், மாணவியை காதலித்து வரு வதாக கூறினார்.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமையில் உல்லாசமாக இருந்த தகவலையும் தெரிவித்தார்.இதற்கிடையில் கர்ப்பிணி யாக உள்ள மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் அனுமதித்து உள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்.
- பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.
நாகர்கோவில் : கன்னியாகுமரிக்கு நவம்ப ர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இந்த சீசனையொட்டி கன்னியா குமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.
இந்த ஆண்டு மொத்தம் 122 சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 34 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதிஉள்ள 88 கடைகள் 22-ந்தேதி மறு ஏலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் கன்னியா குமரி சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள பகுதியிலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு பகுதியிலும் சீசன் கடை ஏலம் எடுத்த வியா பாரிகள், ஐகோர்ட்டு அறிவுரையின்படி கடைகள் போன்று கட்டாமல் நடை பாதையில் திறந்த வெளி யில் சீசன் கடைகளை வைத்துவியாபாரம்செய்ய தொடங்கிஉள்ளனர். இந்த சீசன் கடைகளில் இரவு-பகலாக வியாபாரம் நடந்து வருகிறது.
- சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
- கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது.
நாகர்கோவில் : சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி சப்பாத்து பகுதியில் கடலில் நீராடும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து விஜய்வசந்த் எம்.பி., தேவஸ்தான அதிகாரி, சுற்றுலா துறை அதிகாரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. கூறியதாவது:-சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு 3 கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி, கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது. கடல் அலை கரையில் எவ்வளவு தூரம் அலை கூட்டங்கள் வந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மத்திய அரசின் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தில், மத்திய அதிகாரிகள் உருவாக்கிய திட்டத்தின்படி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மணல் பாங்கான பகுதியில் மக்கள் புனித நீராடிய பகுதியில் மண்பரப்பு பகுதியில் கருங்கல்லால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றது.
கடல் மணல் பரப்பில் கல்லால் சப்பாத்து அமைக்கும் பணிக்கு, அன்றைய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணம் ஒதுக்கப்பட்டது. மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக்கொண்டி ருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் "கால்" வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதனை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கொரோனா காலத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.முக்கடல் சங்கமம் கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் கால் வழுக்கி சப்பாத்து பகுதியிலே கீழே விழுந்ததில் பலருக்கும் தலையில் அடிபட்டு உள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்வதும். பின்னர் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதும் ஒரு தொடர் கதையாக நடந்து வருகிறது.2 வட மாநிலத்தவர் சப்பாத்து பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு பலியாகினர்.
இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் அதிகமாக வரும் கால கட்டத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்களும் கடலில் புனித நீராடும் நிலையில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் அல்லாது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.மேலும் படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மண் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- வாடிக்கையாளர்கள் அவதி
- ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகில் பள்ளிகூடம், பெட்ரோல் பங்க், தனியார் ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. இதனால் எப்போதும் வாடிக்கை யாளர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சம்மந்தப்பட்ட வங்கிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்.களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வங்கி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம்.யை செயல்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோர்ட்டு தீர்ப்பு
- குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
குளச்சல், நவ.18-
குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் (வயது 80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் வந்து விட்டு இரவு வீட் டிற்கு திரும்பி சென்றார். சைமன் காலனி பாலம் அருகில் குறும்பனை சாலை யில் நடந்து செல்லும்போது, குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்த கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் ஞானப்பிரகாசம் மீது மோதி யது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஞானப்பிர காசம் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு அளித் தார்.






