என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு
    • அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    இரணியல் சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயத்தில், மனித வாழ்க்கையில் யோகா பயிற்சியின் சிறப்பை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீரடி ஸ்ரீ சாய்பாபா அறக்கட்டளை சேர்மன் டாக்டர் கோலப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா அருளாசி வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் டாக்டர் மகேஷ், அன்பாலயத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் மற்றும் தலைவர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணாநகர் கோமதி ஆண்டியப்பன் யோகா சென்டர் நிறுவனர் டாக்டர் கோமதி யோகா பயிற்சியின் உடல் ஆரோக்கியத்தின் சிறப்புகளை விளக்கி பேசி, பயிற்சியளித்தார். அவருக்கு அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள், சாய் ஒயிட்ஷைன் கோல்டேஜ் ஏஜ் ஹோம் நிர்வாகிகள் மற்றும் சாய் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • 26-ந்தேதி நடக்கிறது
    • சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

    காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • மேல்சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் 54-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த (13-ந்தேதி) தொடங்கி இன்று (19-ந்தேதி) வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று (18-ந் தேதி) காலை 6.30 மணிக்கு உதயகால பூஜையும், 11 மணிக்கு கும்பாபிஷேகமும், பகல் 12 மணிக்கு பெரு விளை சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியிடமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹாரத்திற்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், யானை ஊர்வலமும் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து கேரள புகழ் மைலேந்திரகாவு சிங்காரி மேளமும், டிஜிட்டல் வே ஷங்கள் கலந்த வண்ண நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இரவு 7 மணிக்கு மாபெரும் வண்ண நிகழ்ச்சிகளும், 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டி சிலம்பம் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஐ. கேட்சன் தலைமை தாங்கி னார். போட்டிச் சிலம்பம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    7-ம் திருவிழாவான இன்று (19-ந்தேதி) திருக் கல்யாண விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 7 மணிக்கு பொங்க லிடுதலும், 11 மணிக்கு அன்னாபிஷேகமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யா ணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 1 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ர நாம அர்ச்சனை புஷ்பாபிஷே கமும், மாலையில் சாயங் கால பூஜையும், அதனைத் தொடர்ந்து மணக்கோல முருகனாக உரு காப்பு நிகழ்ச்சியும், பரிசு வழங்கு தல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராத னையும், 8.45 மணிக்கு மணி மகுடம் என்ற சமூக நாடக மும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கவுரவ தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோசகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் ராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கவுரவத் தலைவர் எம். அருள்குமரன், உபத்தலைவர் ராதா கிருஷ்ணன், இணைச் செய லாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல் முருகன், மண்டப பொறுப் பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல்சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • கடலில் புனித நீராடி வழிபட்டனர்
    • வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும், அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற இடமாகும். இந்த பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடை பெறுவது வழக்கம்.

    அதேபோல கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கி ழமையான இன்று அதி காலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருநடை திறக்கப் பட்டு அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.

    அதைத்தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும், அன்னதானமும் நடந்தது.

    முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தர்மகர்த்தா மனோகரா செல்வன் அய்யா வைகுண்ட சாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழ மையான இன்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர் கள் கூட்டம் அதிகம் காணப் பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங் களை சேர்ந்த ஆயிரக்க ணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்து இருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்தி ருந்து அய்யா வைகுண்ட சாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    இதேபோல முட்டப்பதி யில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, நரியன்விளை யில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின் விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மரியாதை
    • கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட் சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி பேரூராட்சி காங் கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், ராஜகிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை, நவ.19-

    மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன் கொடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழும்பவில்லை.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது விஜயன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி முதல் நாளை (20-ந்தேதி) வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டா டப்பட்டு வருகிறது.

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாட்டின் பொருளா தாரத்தை ஒரு டிரில்லிய னாக்குவதில் கூட்டுறவின் பங்கு எனும் கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வரு கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 7-வது நாளான நாளை 20-ந்தேதி அன்று கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியை சீரமைத்தல் என்ற தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.

    விழாவிற்கு கன்னியா குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்குகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகிக்கிறார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

    விழாவில் பொதுமக்கள், கூட்டுறவாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    மார்த்தாண்டம், களியல், குலசேகரம் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையில், மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தன. களியலில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    கொட்டாரம், மயிலாடி, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அதன்பிறகு மழை பெய்தது. சுமார் 2 மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். காலை 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    கொட்டாரம், சுசீந்திரம், சாமிதோப்பு, கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை பகுதியில் காலை முதலே மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதியிலும் மழை நீடித்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். சிற்றாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மதகுகள் வழியாக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக இருந்தது.

    அணைக்கு 801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.81 அடியாக இருந்தது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவே உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 58.4, பெருஞ்சாணி 4.8, சிற்றார் 1-32, சிற்றார் 2-42, களியல் 60, கொட்டாரம் 25, குழித்துறை 9.2, மயிலாடி 4.2, புத்தன அணை 4, தக்கலை 9.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 12, திற்பரப்பு 31.4, அடையாமடை 7.1, முள்ளங்கினா விளை 4.2, ஆணைக்கிடங்கு 13, முக்கடல் 20.

    • வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.
    • தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்

    இரணியல் :

    திங்கள்நகர் பேரூராட்சி மார்க்கெட் வரி வசூல் செய்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரி வசூல் மையம் மார்க்கெட் நுழைவு சாலையில் உள்ளது. அங்கு உயர்கோபுர மின் விளக்கு, மின் மீட்டர் பெட்டி உள்ளது. வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.

    நேற்று நள்ளிரவு இந்த மின் மீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் ரோந்து வந்தார். அவர் மின் மீட்டர் தீயில் எரிவதை பார்த்து உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இன்ஸ்பெக்டர் பெருமாள், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜாண் வின்ஸ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பரவும் தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததில் தக்க நேரத்தில் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி மேற்கொண்ட டி.எஸ்.பி. தங்கராமனை அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    திங்கள் நகர் பேரூராட்சி பகுதியில் மின் விநியோகம் நடைபெறும் மின்கம்பிகள் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

    நாகர்கோவில் :

    கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹார விழா குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று நடந் தது.

    இந்த விழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுரு கன் சன்னதியில் நேற்று காலையில் முருகப்பெருமா னுக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தன. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

    நாகராஜா கோவிலின் 4 ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னர் நாகராஜா திடலில் சூரனை, முருகப்பெருமான் வேலால் குத்தி வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு 7 மணி அளவில் நடந்தது. பின்னர் ஒழுகினசேரியில் உள்ள ஆராட்டுத்துறையில் சாமிக்கு ஆராட்டு நடந்தது. தொடர்ந்து சாமி கோவி லுக்கு எழுந்தருளினார். இன்று நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி பெரு மாள்புரம் இந்து நாடார் சமு தாயம் வவ்வால்குகை பால முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நேற்று மாலையில் நடந்தது. இதனையொட்டி வவ்வால் குகை பாலமுருகன் சுப்பிரமணியபுரத்திலிருந்து மெயின்ரோடு வழியாகமேள தாளங்களுடன் சூரன் முன்னே செல்ல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் பாலமுரு கன் பின்னே துரத்தியபடி சென்றார். மாலை 6.30 மணிக்கு சூரனை பால முருகன் வதம் செய்தார். தொடர்ந்து கண்ணை கவரும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந் து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட் டளை தலைவர் பகவதி யப்பன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுயம்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    தோவாளை செக்கர்கிரி சுப்ரமணியசாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா அதிர்வேட்டு முழங்க வானவேடிக்கையோடு கேரள பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் மேற்கொண் டார்கள். தினசரி முருகப்பெ ருமானுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று சூரசம்கா ரத்தை முன்னிட்டு செக் கர்கிரி ஆலயத்தில் இருந்து வேலவன் பல்லக்கில் சூரசம்ஹாரத்துக்கு புறப் பட்டு கோவில் அடிவா ரத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

    மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளக் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதை பொது மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.

    விழா ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விழா கமிட்டி செய்து வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதி யப்பன், பொறியாளர் லட்சுமணன், விழா குழு நிர்வாகி கருணாநிதி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணுஉள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    முடிவில் வான வேடிக்கை நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்த முருகன் கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது. வடிவீஸ்வ ரம் அழகம்மன் கோவில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் சுவாமி கோவில், தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சாமி கோவில், வெள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி முருகன் குன்றம் கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் இந்திர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்களுடன் பட்டண பிரவேசம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சி.சி.டி.வி.காமிராவின் காட்சிகள் ஆய்வு
    • குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    நாகர்கோவில், நவ.19-

    புதுக்கடை அருகே முன்சிறை சந்திப்பில் இருந்து முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலகம் மங்காடு வழியாக களியக் காவிளைக்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் புதுக்கடை போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். புதுக்கடை போலீசாரும் குழந்தை நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    பின்னர் முட்புதரில் கிடந்த குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை வீசப் பட்டுள்ளது.

    எனவே அதே பகுதியை சேர்ந்த பெண்கள் யாராவது வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். கள்ளக்காத லில் பிறந்த குழந்தையாக இருக்க லாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் யாராவது நிறை மாத கர்ப்பிணியாக இருந்து தற்பொழுது குழந்தை பெற்றுள் ளார்களா? என்பது குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    மேலும் குழந்தை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சி.சி.டி.வி. காமிராக்களில் சரியான காட்சிகள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள்.

    • குளச்சல் மரைன் போலீசில் மீனவர்கள் மனு
    • இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது

    குளச்சல் :

    தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகு கள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

    இந்த மீனவர்கள் தூண்டி லை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இந்நிலை யில் கடந்த சில மாதங்களாக தேங்காய்பட்டணம் கிழக்கு, மேற்கு பகுதியில் சில கட்டு மரங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன்பிடித்து செல்வதாக அப்பகுதி கட்டு மர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன் படுத்தி மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த கோரி நீரோடி முதல் ஆரோக்கிய புரம் வரை உள்ள கட்டுமரம், வள்ளம் மீன் பிடித்தொழில் பாதுகாப்பு சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் மரிய விஜயன் தலைமையில் மீனவர்கள் நேற்றிரவு குளச்சல் மரைன் போலீசில் மனு அளித்தனர்.

    அப்போது பூத்துறை, ராமன்துறை, இனயம் புத்தன்துறை கட்டு மரம், வள்ளம் மீனவர்கள் உடனிருந்தனர்.

    ×