

ராஜாக்கமங்கலம், நவ.21-
ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 65). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீனிவாசனை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஸ்ரீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.