search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாவத்துறையில் ரூ.10 லட்சம் செலவில் மீனவ மழலை குழந்தைகளின் அங்கன்வாடி கட்டிடம்
    X

    வாவத்துறையில் ரூ.10 லட்சம் செலவில் மீனவ மழலை குழந்தைகளின் அங்கன்வாடி கட்டிடம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மீனவ பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து வாவத்துறை பகுதியில் பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு தங்களது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    மீனவ மக்களின் அந்த கோரிக்கையை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்று கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து வாவத்துறை பகுதியில் ரூ..10லட்சம்செலவில் மீனவ மழலை குழந்தைகளின் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா உலக மீனவர் தினமான இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்று அகில உலக மீனவர் தினம்என்பதால் மீனவ மக்களுக்கு எனது உலக மீனவர் தின வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர் நலன் காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. சுனாமி ஏற்பட்ட நேரத்தில் மட்டுமின்றி கொரோனா காலத்திலும்மீனவ மக்களுக்காக எனது சார்பிலும் அ.தி.மு.க. சார்பிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு வாழ்வாதா ரத்தையும் அளித்துஉள்ளோம்.மீனவ மக்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்வதற்காக கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். ஓமன் நாட்டில் தவிக்கும் கோவளம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். விரைவில் அந்த மீனவர்கள் பாதுகாப்பாக ஊர்திரும்ப வேண்டும் என்று உலக மீனவர்தினமான இன்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

    அதன்பிறகு அங்கன்வாடி புதிய கட்டடத்தில்தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உலக மீனவர்தினத்தையொட்டி கேக் வெட்டி அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்பு பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாவத்துறை பங்குத்தந்தை லிகோரியஸ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆசிர்வதித்து ஜெபம்செய்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஆரல் வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம்வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம்ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆடலின் சேகர், பேரூர் கழகச் செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், குமார், எழிலன், சிவபாலன், மணிகண்டன், டாக்டர் தேவசுதன், லீபுரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் லீன், அ.தி.மு.க. நிர்வாகிகள் நசரேத் பசலியான், சுகுமாரன் டாஸ்மாக் மணிகண்டன், சந்துரு என்று ஜெயச்சந்திரன், கிருஷ்ண தாஸ், அக்க்ஷயா கண்ணன், வக்கீல் ஜெயகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×