search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதி-மதத்தின் பெயரால் பிரித்து காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகின்றனர்
    X

    சாதி-மதத்தின் பெயரால் பிரித்து காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகின்றனர்

    • கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
    • மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை

    குளச்சல் :

    மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு (பெடா), கோடிமுனை பங்கு பேர வை, பங்கு மக்கள் சார்பில் உலக மீனவர் தினம் கோரிக்கை மாநாடு மற்றும் கோடிமுனையில் மீன் பிடித்துறைமுகத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கோடி முனையில் ஊர் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்த லைவர் எனல்ராஜ், பெடா தலைவர் பிரிட்டோ ஆன்றனி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்றார். அவர் பேசியதாவது-

    ஒவ்வொரு நாளும் இயற்கையுடன் போரிட்டு, அதே சமயம் மிகவும் இயற்கையை நேசித்து வாழ்பவர்கள் மீனவ மக்கள். மீனவர்களின் துயரங்களை ஏற்றுக் கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டி யவர்களை கொண் டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு மரியாதை தராமல், ஒடுக்கும் சூழலை நாம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.

    சூழலியல் மாற்றத்தால் பனி பிரதேசத்தில் பனி உருகி கடல் மட்டம் உயரும் நிலை உள்ளது. கடல் மட்டம் உயரும் போது கடல் கரையில் இருக்கும் வீடுகள் அழியும் நிலை ஏற்படும். கடலில் மக்களின் வாழ்வி யலை பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு வந்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்த வீடுகள், கடற்கரை காணாமல் போகும் நிலை யை காண்கிறோம்.

    மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட் டமாகவே உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு கடல் தாய் போன்றது. தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கி றது. மீனவர்கள் பாதிக்கப்ப டும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. மக்களை பிரித்தாளுவது, ஜாதி, மதத்தின் பெயரால் பிரச் சினைகளை உருவாக்கி காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் பிரிவினை ஏற்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

    பிரிவினையால் பிரச்சி னைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது பெண்க ளும், குழந்தைகளும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண் டும். எந்த மதமாச்சரி யங்களும் இல் லாமல் அனைவரும் ஒற்று மையாக இந்த விழாவை கொண்டாடு கிறோம். இது தொடர வேண்டும். நாம் ஒன்றுப்பட்ட மனிதர்களாக வாழும் சூழ்நி லையை தொடர வேண்டும்.

    ஒற்றுமையாக இருக்கும் போது, நம்மை பற்றி கவ லைப்படும் அரசு இருக் கும்போது கோரிக்கைகள் நிறைவேறும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டா லின் கடிதம் எழுதி உள்ளார். நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

    ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கையில் வைத்துள்ளார். சட்டசபையில் மசோதா நிறைவேற்றினால் அதை நிறுத்தி வைக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு நலவாரி யம், தனித்துறை அமைக்கப் பட்டது கலைஞர் ஆட்சி யில்தான். தொடர்ந்து உங்களோடு நிற்கும் ஆட்சி, உங்களோடு கைகோர்த்து வரும் ஆட்சி. நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படு வார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தீர்மானத்தை பெடா பொதுச்செயலாளர் ராஜ் முன் மொழிந்தார். முன்னதாக குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமையில் சைமன்காலனி சந்திப்பில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், கோடிமுனை பங்குத்தந்தை சீலன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், தி.மு.க.தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், பசிலியான் நசரேத், கோடிமுனை ஊர் பொருளாளர் சுரேஷ், குழியாளி ஜாண்சன், பெடா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×