அருமனை அருகே 8 வயது மகளுடன் பெண் மாயம்

2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருமனை அருகே 8 வயது மகளுடன் பெண் மாயம்
Published on

நாகர்கோவில் :

அருமனை அருகே உள்ள இடைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கணவரை இழந்த 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ஜோஸ்பின் ஷீபா, தனது மகள் ஆஷீகா (8)வுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அருமனை போலீசில் வில்சன் புகார் செய்தார். அதில், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜினு என்பவருடன் ஜோஸ்பின் ஷீபா இருப்பதாகவும் அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் குறிப்பி ட்டு உள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல், குழந்தைகளுடன் மாயமான ஜோஸ்பின் ஷீபாவை, போலீசார் மலப்புரத்தில் இருந்தே அழைத்து வந்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com