கொட்டாரத்தில் சம்பவம் தூக்கு போட்டு டெம்போ டிரைவர் தற்கொலை

சிகிச்சையில் இருந்த பாட்டியும் சாவுகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கொட்டாரத்தில் சம்பவம் தூக்கு போட்டு டெம்போ டிரைவர் தற்கொலை
Published on

கன்னியாகுமரி,நவ.20-

கொட்டாரம் ராமர் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 31). இவர் தண்ணீர் கேன் போடும் டெம்போவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவரது பாட்டி புஷ்பம் (75) உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடன் இருந்து கவனித்து வந்த ஜவகர், பாட்டி இறந்து விடுவாரோ என்ற மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இதனால் மனம் உடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அதன் பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையில் பாட்டி புஷ்பமும் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து விட்டார். பேரனை தொடர்ந்து பாட்டியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com