இரணியல் அருகே முதியவர் மாயம்

1½ மாதங்கள் ஆகியும் சுப்ரமணியன் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே முதியவர் மாயம்
Published on

இரணியல் :

இரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 74). மாற்றுத்திறனாளி. இவரது சகோதரி செல்வி, குளச்சல் கீழ்நிரவுவிளையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுப்ரமணியனுக்கு திருமணம் ஆகாததால் தினமும் காலை அவருக்கு சகோதரி செல்வி உணவு கொண்டு கொடுப்பது வழக்கம்.

சம்பவத்தன்று உணவு கொண்டு வந்தபோது சுப்ரமணியனை காணவில்லை. சுப்ரமணியன் அவ்வப்போது காணாமல் சென்று விட்டு பின்னர் சில நாட்களில் திரும்பி வந்து விடுவாராம். இதனால் வழக்கம் போல திரும்பி வருவார் என செல்வி இருந்துள்ளார். ஆனால் 1½ மாதங்கள் ஆகியும் சுப்ரமணியன் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த செல்வி பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செல்வி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com