என் மலர்
கன்னியாகுமரி
- கட்டிட தொழிலாளி மீது வழக்கு
- மண்டைக்காடு அருகே பரபரப்பு
மணவாளக்குறிச்சி :
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று மணக்காட்டுவிளையை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன்கள் சதீஸ்(வயது 31), வினேஷ் (28). கட்டிட தொழிலாளர்களான இவர்களுக்கிடையே பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சதீஸ், தனது தம்பி வினேசை சந்தித்து தான் கொடுத்த கடன் தொகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினேஷ் தகாத வார்த்தையால் திட்டி பைக் சாவியால் சதீஸின் வலது கழுத்து, பின்னந்தலை ஆகிய பகுதியில் குத்தி காயப்படுத்தினாராம்.
மேலும் அப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குவா தத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதி யினர் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், சம்பவ இடம் விரைந்து சென்றார். அவர் வினேஸை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வினேஸ், தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸை வெட்டினார்.
இதில்அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் மண்டைக்காடு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அரசு பணி செய்யாவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சதீசும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
- காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.
கன்னியாகுமரி :
கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோவில்களில் நேற்று இரவு சொக்கப்பனை கொளு த்தப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோ வில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருக்கார்த்திகையை யொட்டி அந்தந்த கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அதன்பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளிசென்று தங்களது வீடுகளிலும். விளைநிலங்களிலும். தொழில்நிறுவனங்களிலும் வைத்தனர். இவ்வாறாக இந்த சொக்கப்பனையில் எரிந்த சாம்பலை வைப்பதால் அந்த இடத்தில் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இந்த சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சியில் ஏராள மான பக்தர்கள் பங்கே ற்றனர். சொக்க ப்பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். பறக்கை அருகே உள்ள புல்லுவிளை பெருமாள் சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வினை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஊர் தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஊர் செயலாளர் கனகராஜ் மற்றும் ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்பட்டது. முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.
மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பபட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம்வரை தெரிந்தது. 3 நாட்கள் இரவு-பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினார்கள். வீடுகள் தோறும் கொழு க்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்ந்தா ர்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களி லும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறுவர்கள் இரவு நேர ங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடினார்கள்.
- மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.
என்.ஜி.ஓ. காலனி :
நாகர்கோவில் நாகராஜா கோவில் தெற்குரத வீதியில் ராஜன் மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வருபவர் சி. ராஜன். அ.தி.மு.க.வில் 1988 முதல் 35 வருட காலமாக பணியாற்றி வரும் இவரை, குமரி மாவட்ட செயலா ளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பரிந்துரை யின் பெயரில் வர்த்தக அணி மாநில இணைச் செயலாளராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தார். இதைத் தொடர்ந்து சி.ராஜன், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை யில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாநில நிர்வாகி சந்துரு, நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷய கண்ணன், தோ வாளை யூனியன் தலைவரும் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வர்த்தக அணி மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ராஜன், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் மற்றும் பிள்ளை யார்புரம் சிவந்தி ஆதித்த னார் கல்லூரி செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் நிர்வகித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.
அ.தி.மு.க வர்த்தக அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ராஜ னுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- . 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசு
- 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர்.
மார்த்தாண்டம் :
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குட்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி குலசேகரத்தில் நடைபெற்றது.
இதில் மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் பியோனா, ஓவியா முதல் பரிசையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணா, அர்சித் ரிஸ்வான் இரண்டாம் பரிசையும், 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஸ்டெனி முதல் பரிசையும் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் ஹேசல் மெர்சியா-விஸ்மிகா முதல் பரிசையும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரிஜோ முதல் பரிசையும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர். புள்ளிகள் அடிப்படையில் 2-ம் இடத்தை பெற்று சுழற்கேடயத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கலாசன், இணை தாளாளர் பிரான்ஸிஸ், பள்ளி முதல்வர் ஷீலா குமரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
- வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை
- புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.
பூதப்பாண்டி :
தோவாளை வட்டாரத்தில் அனைத்து அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் புற்றுநோய் சோதனை நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்குமேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை விளக்கும் வகையில் இறச்சகுளம் ஊராட்சி அலுவலகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் மருத்துவ இடைநிலை சுகாதார பணியாளர் விஜிலா புற்றுநோய் பரிசோதனை குறித்து விளக்கி பேசினார். பின்னர் இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலெட்சுமி, ஊராட்சி செயலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யாக்குட்டி, கிராம சுகாதார செவிலியர் பிரேமகுமாரி மற்றும் தன்னார்வல பணியாளர் ஷோபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்
திருவட்டார் :
குலசேகரம் அருகே உள்ள குளச்சவிளாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது 77). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகள் அஜிதாகுமாரி பரா மரிப்பில் வாழ்ந்து வந்தார்.
இவர்களுடன் ராதா குமாரியின் தங்கை மகன் பிரபாத் குமார் (48) என்பவரும் வசித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த சம்பவம் ராதாகுமாரியை மிகவும் பாதித்தது.
இதுபற்றி உறவினர்க ளிடம் அடிக்கடி கூறி வேதனைப்பட்டு வந்துள் ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரப்பர் பால் ஊற வைக்கும் ஆசிட்டை குடித்துவிட்டு ராதாகுமாரி மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அஜிதா குமாரி குல சேகரம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர் கோவில் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, ராதாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அஜிதாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராதா குமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடந்தது
- பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பின்னர் அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்தது.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அம்மன் வாகனம் வரும்போது அங்குள்ள முத்தாரம்மன் கோவில் முன்பு வைத்து வாகனத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்ம னுக்கும், முத்தாரம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்ட னர்.
அதன்பிறகு 10.30 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நள்ளிரவு 11.30 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், திருக்கார்த்திகை மண்ட கப்படி கட்டளைதாரர்கள் பாலன், மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
- மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணைகளில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் நேற்று பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று அந்த அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
உபரி நீர் திறக்கப்படாததால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவில் தண்ணீர் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் மிதமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று பகலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். ஒரு வார காலத்திற்கு பிறகு அங்கு குளிக்க அனுமதி வழங்க்ப்பட்ட நிலையில், பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகளும் செய்யப்பட்டன.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.99 அடியாக இருந்தது. அணைக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.09 அடியாக உள்ளது. அணைக்கு 360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.
- நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
- போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
மதகடிப்பட்டு:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 90 சதவீத பணி நிறைவு பெற்றுவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு 4 வழி சாலைக்கு அருகாமையில் தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே எல்.ஆர். பாளையம் வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது.
இந்த சாலைக்கு எதிர் புறம் பிரபல மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளி என அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறுமுனைக்கு செல்ல வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும்.
ஆனால் நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் உறுதி அளித்தப்படி பாதை அமைத்து தராததால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்த போவதாக எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் அறிவித்தனர்.
அதன் படி இன்று எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
- ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
- செல்வின் சேகர் நோயால் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார்.
செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் நோயால் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டது. அவருடைய இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
செல்வின் சேகருக்கு விஜய் வசந்த் எம்.பி. இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இத்தகைய தருணத்தில் இந்த முடிவினை எடுத்த செல்வின் சேகர் அவர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். தான் இறக்கும் போது 7 பேரை வாழ வைத்த செல்வின் சேகர் அவர்களின் பெருமை பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
- ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முது நிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும்,
ஒரு மகனும் உண்டு. செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ஆதரவற்று சுற்றித்திரியும் பெரியோர்களுக்கு உணவுகள் அளித்தும், காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மாத செலவு கட்டணமும் வழங்கியும் வந்துள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.
இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மூளையில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டது.
செல்வின் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பின்பு தனது உடல் "உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார். அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கூறினர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அவரது இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரானாக் மாவட்டம் சரல்வி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம்-கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் ல்! உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட 5 அரசு அதிகாரிகள் பலரும் நேரில் சென்று உட லுக்கு அரசு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
- பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர்.
- இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் :
குலசேகரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அழகு கலை பயிற்சி முடித்த அவர் தற்போது நாகர்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் அழகு கலை பயிற்சி பெற்ற மற்றொரு பெண்ணும் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்தனர். அப்போது இருவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டது.
அதோடு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர். ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியதுடன் கடித்தும் கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக இருவரும் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






