என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறச்சகுளம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
- வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை
- புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.
பூதப்பாண்டி :
தோவாளை வட்டாரத்தில் அனைத்து அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் புற்றுநோய் சோதனை நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்குமேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை விளக்கும் வகையில் இறச்சகுளம் ஊராட்சி அலுவலகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் மருத்துவ இடைநிலை சுகாதார பணியாளர் விஜிலா புற்றுநோய் பரிசோதனை குறித்து விளக்கி பேசினார். பின்னர் இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலெட்சுமி, ஊராட்சி செயலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யாக்குட்டி, கிராம சுகாதார செவிலியர் பிரேமகுமாரி மற்றும் தன்னார்வல பணியாளர் ஷோபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






