என் மலர்
கன்னியாகுமரி
- 2 நாளில் ரூ.5 லட்சம் வசூலானது
- சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகி றார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் நாகர்கோவில் நகரில் மட்டும் 238 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் மூலமாக ரூ.3 லட்சம் வசூலானது. இந்த நிலையில் நேற்றும் போலீ சார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சோதனை நடத்தியபோது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற பலரை போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களும் சிக்கினார்கள். ஆட்டோக்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதிக மாணவிகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரை வரின் லைசென்ஸை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். வடசேரி, கோட்டார், கலெகடர் அலுவலகம் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 12 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ரூ.2 லட்சம் வசூலானது. கடந்த 2 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. இன்று காலையில் போக்குவரத்து போலீசார் கேப் ரோடு, ராமன் புதூர் சந்திப்பு, வடசேரி பகுதி களில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.
இதேபோல் சுசீந்திரம் போலீசார் ஆசிரமம் பகுதி யில் சோதனை மேற் கொண்டனர். குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ஹெல்மெட் சோதனை மேற்கொள்ளும் போலீசார் கனரக வாகனங்களில் கனிம வளங்களை அதிக அளவு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
- தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண் டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. கன்னியாகுமரியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது பற்றி அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கன்னியா குமரி டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நோட்டமிட்ட யாரோ சில மர்ம நபர்கள் இந்த வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது தெரியவந்தது.
மேலும் அந்த வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த பீரோவில் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் போன்றவற்றை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.
மேலும் போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கண்காணிப்பு காமிராவில் ஒரு சில நபர்களுடைய உருவங்கள் தெரிவதால் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபட்டனர்
- பல்வேறு இடங்களில் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.
நாகர்கோவில், ஜூலை.22-
ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கை கூடும் என்பது ஐதீகம். அம்மன் பிறந்த நாளை ஆடிப்பூர விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
இன்று ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத் தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூ ரத்தையொட்டி இன்று காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கோவில்களில் பெண் கள் கூழ் படைத்தும், கொழுக்கட்டை அவிழ்த்து படைத்தும் வழிபாடு செய்தனர். பல்வேறு இடங்களில் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.
நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் இன்று காலையில் நடை திறக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு காலையி லேயே பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
அவ்வையார் அம்மன் கோவிலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் வந்து வழிபட்டு சென்றனர். கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபட்டனர்.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோவிலில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் கூழ் படைத்து வழிபாடு செய்தனர். அம்மன் கோவிலில் அன்ன தானமும் வழங்கப்பட்டது
- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
- கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
நாகர்கோவில் :
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, குமரி மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி நாகர்கோவில் மண்டல அலுவலகம் சார்பில் வங்கி சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம், நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநகர மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கலெக்டர் ஸ்ரீதர் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவி கள் வழங்கி பேசியதாவது:-
பொதுத்துறை வங்கி களின் வாயிலாக பல்வேறு தரப்பட்ட கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியானது அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக திகழ்ந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட வங்கிகளின் மூலமாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசால் வழஙங்கப்படும் கடனுதவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வங்கி களின் வாயிலாக என்னென்ன கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்டம்பர் முதல் கலை ஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல் பாட்டு வருகிறது. இதற்கான உதவி தொகை வங்கிகளில் நேரடியாக வழங்கப்படும். தற்போது விண்ணப்ப வினியோகம் வீடு, வீடாக நடக்கிறது. விண்ணப்ப பதிவு முகாம் 24-ந் தேதி தொடங்குகிறது.
அந்தந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரம், இடம் நாள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்ப பதிவு நடக்கும். இந்த விண்ணப்ப பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதார் இணைத்த வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் பதிவு எளிதாக இருக்கும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. வங்கிகள் மக்கள் சேவையில் சிறந்து விளங்கு கின்றன. கடன் உதவிகளை முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் ரூ.2.08 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப் பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள், கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் (சென்னை) சந்தீப்தா குமார் நாயக், நாகர்கோவில் மண்டல அலுவலர் பழனி சாமி, மாவட்ட தொழில் மைய அலுவலர் பெர்பெட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகோள்
- பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும்.
இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம், உள் வாங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. நேற்று முதல் குளச்சல் அருகே கொட்டில் பாட்டில் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது.
கடந்த ஆண்டு பழைய ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கடல ரிப்பில் பழைய ஆலயம் அருகில் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு சாலை துண்டிக் பப்பட்டுள்ளது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயமும் ஏற்பட்டது.
இதனால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 10 வீட்டினர், வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளனர்.
கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே ஆற்றூர், சிதறால் திக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாறையை உடைத்து துண்டுகளாக மாற்றி வேலிக்கல் மற்றும் பாலக்கல் போன்ற தேவைகளுக்கு அனுமதி பெற்று எடுத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சிதறால் பகுதியிலிருந்து டெம்போவில் வேலிக்கல் கடத்துவதாக திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆற்றூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் வேலிக்கல் ஏற்றி தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம் போவை கல்லுடன் பறிமுதல் செய்தனர். பின்னர்அதனை திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில் :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:-
ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. டிபன், மதிய உணவு உள்ளிட் டவை வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. சில வகை உணவுகளுக்கு மட்டும் விலை குறைக் கப்படாமல் அதற்கோற்ற விலையை ஐ.ஆர்.சி.டி.சி. வசூலித்து வருகின்றது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள நாகர்கோவில், திருவனந்த புரம் உள்ளிட்ட 7 ரெயில் நிலையங்களில் 2-ம் வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப் படாத சாதாரண பெட்டியில் பயணம் செய்கின்ற பயணி களுக்கு குறைந்த விலையில் உணவு மற்றும் குடிநீர் வழங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதற்கான 2-வகை உணவுகள் பின்வருமாறு:-
முதல் வகை உணவு 7 பூரி, உலர் பருப்பு, கூட்டு, ஊறுகாய் ஆகியவற்றிற்கு ரூ.20 நிர்ணயிக்கப் பட்டுள்ளன. மேலும் 2-வது வகை உணவாக அரிசி சாதம், சிவப்பு காராமணி, மசால் பூரி, கிச்சடி, மசால் தோசை ஆகிய தென் இந்திய உணவு வகைகள் ரூ.50-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது.
சாதாரணப்பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் ரெயில் நிலையங்களில் வசதி செய்யப்பட உள்ளது.
முன்பதிவு செய்யப்ப டாத பெட்டிகள் ரெயில் நிலை யத்தில் வந்து நிற்பதற்கு ஏற்ப நடை மேடைகள் சீர மைக்கப்பட உள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் 6 மாதம் செயல்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
- சமுதாய நிர்வாகிகள் 21-ந்தேதியான நேற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் இந்து நாடார் சமுதா]யத்திற்குட் பட்ட இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழி முப்பந்தல் (மேற்கு) பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களை இந்து நாடார் சமுதாயத்தின் சார்பில் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தும் நட வடிக்கையினை எடுத்தது. கடந்த 17-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோவில் (கிழக்கு) செயல் அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் (மேற்கு) நிர்வாக பொறுப்பு களை தற்போது பார்த்து வரும் சமுதாய நிர்வாகிகள் 21-ந்தேதியான நேற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து காலை மற்றும் இரவிலும் பொதுமக்கள் கோவிலில் குவியத்தொடங்கினர். இந்நிலையில் நேற்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் விவரங்களை கேட்டு அறிந்தார். பின்னர் சமுதாய நிர்வாகிகளுடன் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் (கிழக்கு) செயல் அலுவலர் பொன்னியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கைய கப்படுத்தும் நட வடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமுதாயத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதால் அதுவரை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
50 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ததற்கான ஆதாரங்களை செயல் அலுவலரிடம் ஒப்படைக்க சமுதாய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறுத்தி வைத்தது. உடன்பாடு ஏற்பட்டதால் பொது மக்களும், பக்தர்களும் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
- 2 குழுக்களாக பிரிந்து சென்று வனத்துறையினர் தீவிரம்
- ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்
கன்னியாகுமரி :
சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைகல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது.
ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்களை கடித்து குதறி வருகிறது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
புலியை பிடிக்க கண்கா ணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டதுடன் 2 இடங்களில் கூண்டு வைத் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக புலியை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டில் புலி சிக்கவில்லை.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து அதை பிடிக்க களக்காடு முண்டந்துறையில் இருந்து டாக்டர் குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் வருகை தந்தனர். அவர்கள் நேற்று அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலோன் காலனி பகுதி, மூக்கறைகல் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆனால் புலி சிக்கவில்லை. இந்த நிலையில் இன்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வன அதிகாரி இளையராஜா தலைமையில் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 குழுக்களாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். 2 குழுக்களிலும் 30 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.
பழங்குடி மக்கள் காட்டுப்பகுதிகளில் வழி களை அடையாளம் காட்டிக்கொடுக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பேச்சிப்பாறை மூங்கில் காடு பகுதியில் இன்று தேடும் பணி நடந்தது. வனத்துறையின் மோப்பநாய் உதவியுடன் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று மதியம் வரை புலி சிக்கவில்லை. தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள். புலி நடமாட்டம் உள்ளதையடுத்து சிற்றாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர்.
- மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட் டம் குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் ஆதார், இ-சேவை மையம், பிறப்பு-இறப்பு பதிவு மையம், நகராட்சி அலுவலகம் செயல்படுகின்றன. இத னால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் அலுவலகத்துக்குள் சென்றார். மாலையில் மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது, மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் குரங்கு நிற்பதை பார்த்தார். பின்னர் அவர் குரங்கை துரத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு, மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு அருகே நின்ற மரத்தின் கிளை மீது ஏறி மேலே அமர்ந்து கொண்டது.
உடனே சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர். மேலும் கட்டைகளை எடுத்து வீசியும் பயமுறுத்தினர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குரங்கு சாவியை மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் கொண்டு வைப்பதும், எடுப்பதும் மட்டுமின்றி 2 கைகளில் மாறி, மாறி பிடித்து போக்கு காட்டியது.
ஒரு கட்டத்தில் துரத்தி பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் சாவியை வாங்க முடியாது என முடிவு செய்து சோர்ந்து போய் அமர்ந்திந்தனர். இவர்கள் சோர்ந்து போய்விட்டதை தெரிந்து கொண்ட குரங்கு சாவியை ஊழியர் மீது வீசி எறிந்தது. பின்னர் அங்கிருந்து மரத்துக்கு மரம் தாவி குரங்கு வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.
அருணாச்சலம் சினிமாவில் நடிகர் ரஜினியின் ருத்ராட்சம் மாலையை குரங்கு பறித்து செல்வது போல் குழித்துறை நகராட்சி ஊழியரின் மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டி.எஸ்.பி. மகேஷ்குமார் எச்சரிக்கை
- உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி. மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. இதனால் ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- உறவினரகள் சுதாகரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- மனக்குழப்பத்தில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதி நெல்லிபழஞ்சிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகன் சுதாகர் (32). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனக்குழப்பத்தில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு ஏதோ விஷ மருந்து குடித்துள்ளார் .மறுநாள் காலையில் வாந்தி எடுத்த போது, விஷ வாடை வீசியதால் சந்தே கமடைந்த உறவினரகள் சுதாகரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிசிட்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, உள் நோயாளியாக சிகிட்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிட்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக சுதாகரின் தாயார் பால்தங்கம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






